Trinco Mirror
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • திருக்கோணமலை
    • உலகம்
    • ஆய்வுக் கட்டுரை
    • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • ஆவணங்கள்
  • அமைப்புகள்
Listen Live
Font ResizerAa
Trinco Mirror
Listen
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • திருக்கோணமலை
    • உலகம்
    • ஆய்வுக் கட்டுரை
    • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • ஆவணங்கள்
  • அமைப்புகள்
Follow US

திருகோணமலை மாநகர சபையில் தை மாதம் “தமிழ் மரபு மாதமாக” ஏகமனதாக அங்கீகாரம்

கார்த்திகை 19, 2026
இலங்கை திருக்கோணமலை
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

திருகோணமலை மாநகர சபையில் இன்று (19.11.2026) நடைபெற்ற அமர்வில், தை மாதத்தை “தமிழ் மரபு மாதமாக” அதிகாரப்பூர்வமாக அங்கீகரிக்கும் பிரேரணை ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.

இப்பிரேரணை மாநகர சபை உறுப்பினர் கௌரவ உதயகுமார் அஜித் குமார் அவர்களால் முன்மொழியப்பட்டதுடன், கௌரவ கார்மேகம் கமலன் அவர்களால் வழிமொழியப்பட்டது. இதனைத் தொடர்ந்து, மாநகர சபை உறுப்பினர்கள் அனைவரும் ஒருமனதாக ஆதரவு தெரிவித்து பிரேரணையை நிறைவேற்றினர்.

அத்துடன், ஒவ்வொரு ஆண்டும் தை மாதத்தில் தமிழர் பண்பாடு மற்றும் மரபுக் கலைகளை ஊக்குவிக்கும் நோக்கில் மாநகர சபையின் ஏற்பாட்டில் கலைநிகழ்வுகள், போட்டிகள் மற்றும் மரபுசார் பண்பாட்டு நிகழ்ச்சிகள் நடத்தப்பட வேண்டும் என்பதையும் சபை ஏற்றுக்கொண்டது.

மேலும், தமிழ் மரபு மற்றும் பாரம்பரியத்தை பாதுகாத்து, அதனை அடுத்த தலைமுறையினருக்கு எடுத்துச் செல்லும் நோக்கில் “தமிழ் மரபு பாதுகாப்புக் குழு” ஒன்றை திருகோணமலை மாநகர சபையின் கீழ் அமைக்க வேண்டும் என்ற யோசனையையும் கௌரவ உதயகுமார் அஜித் குமார் அவர்கள் முன்வைத்தார். இப்பிரேரணையும் மாநகர சபையால் ஏகமனதாக அங்கீகரிக்கப்பட்டது.

இந்த தீர்மானம், திருகோணமலையில் தமிழர் பண்பாட்டு அடையாளம், மரபு மற்றும் பாரம்பரிய விழுமியங்களை பாதுகாத்து மேம்படுத்தும் வரலாற்றுச் சிறப்புமிக்க நடவடிக்கையாகக் கருதப்படுகிறது.

Your Ad Here
Place your ads on our website

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
வியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனி
AdvertisementSidebar Ad

தொடர்புடைய செய்திகள்

இலங்கைதிருக்கோணமலை

சோகத்தில் ஆழ்த்திய குறிஞ்சாக்கேணி படகு விபத்தின் நான்காவது ஆண்டு நினைவு

கார்த்திகை 24, 2025
இலங்கைதிருக்கோணமலை

திருகோணமலை இந்துக் கல்லூரி மாணவனின் ஜனாதிபதி சாரணர் விருதுக்கான சமூக செயற்திட்டம் வெற்றிகரமாக முன்னெடுப்பு!

ஆடி 19, 2026
இலங்கை

தொடரும் இனவழிப்பு ! முல்லைத்தீவில் இராணுவத்தினரால் துரத்தி துரத்தி தாக்குதல்

ஆவணி 9, 2025
இலங்கைதிருக்கோணமலை

திருகோணமலையின் அபிவிருத்தி வாய்ப்புகள் குறித்து ஜெர்மனி தூதுவருடன் திருகோணமலை மாவட்ட வர்த்தக சம்மேளனம் கலந்துரையாடல்

ஆனி 2, 2026
Trinco MirrorTrinco Mirror
Follow US
© 2025 Trinco Mirror Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • நிகழ்வுகள்
  • ஆவணங்கள்
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?