Trinco Mirror
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • திருக்கோணமலை
    • உலகம்
    • ஆய்வுக் கட்டுரை
    • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • ஆவணங்கள்
  • அமைப்புகள்
Listen Live
Font ResizerAa
Trinco Mirror
Listen
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • திருக்கோணமலை
    • உலகம்
    • ஆய்வுக் கட்டுரை
    • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • ஆவணங்கள்
  • அமைப்புகள்
Follow US

திருகோணமலையின் அபிவிருத்தி வாய்ப்புகள் குறித்து ஜெர்மனி தூதுவருடன் திருகோணமலை மாவட்ட வர்த்தக சம்மேளனம் கலந்துரையாடல்

ஆனி 2, 2026
இலங்கை திருக்கோணமலை
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

திருகோணமலை மாவட்ட வர்த்தக சம்மேளனம் (TDBC) ஜெர்மனி நாட்டின் இலங்கைக்கான தூதுவர் டாக்டர் பெலிக்ஸ் நியூமன் (Dr. Felix Neumann) அவர்களை, சம்மேளனத்தின் பணிப்பாளர் சபை உறுப்பினர்களுடன் இணைந்து அண்மையில் திருகோணமலையிலுள்ள J7 விராஜ் ஹோட்டலில் சந்தித்து கலந்துரையாடியது.

இச்சந்திப்பின் போது திருகோணமலை மாவட்டத்தின் பொருளாதார அபிவிருத்தி வாய்ப்புகள் மற்றும் ஜெர்மன் முதலீட்டாளர்கள் மற்றும் வணிக நிறுவனங்களுடன் ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து விரிவாக ஆராயப்பட்டது.

குறிப்பாக, வெளிநாட்டு முதலீடுகளை ஈர்த்தல், வர்த்தகம் மற்றும் சுற்றுலாத்துறையை மேம்படுத்தல், உட்கட்டமைப்பு வசதிகளை வலுப்படுத்தல் மற்றும் மாவட்டத்தில் புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்குதல் போன்ற விடயங்கள் குறித்து கருத்துப் பரிமாற்றம் இடம்பெற்றது.

மேலும், ஜெர்மனிக்கும் இலங்கைக்கும் இடையிலான பொருளாதார உறவுகளை வலுப்படுத்துவதன் அவசியம் வலியுறுத்தப்பட்டதுடன், திருகோணமலையின் நிலையான அபிவிருத்தியை நோக்கமாகக் கொண்ட கூட்டு முயற்சிகள் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது.

திருகோணமலை மாவட்ட வர்த்தக சம்மேளனம், சர்வதேச ஒத்துழைப்புகளை விரிவுபடுத்தி முதலீட்டு வாய்ப்புகளை ஊக்குவிப்பதன் மூலம் மாவட்டத்தின் நீண்டகால பொருளாதார வளர்ச்சி, தொழில் முன்னேற்றம் மற்றும் மக்களின் வாழ்வாதார மேம்பாட்டிற்கு தொடர்ந்தும் பங்களிக்க உறுதிபூண்டுள்ளது.

Your Ad Here
Place your ads on our website

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளி
AdvertisementSidebar Ad 2

தொடர்புடைய செய்திகள்

இலங்கைதிருக்கோணமலை

வியட்நாமில் நடைபெற்ற ஒலிம்பியாட் போட்டியில் திருகோணமலை மாணவர்கள் சாதனை

ஆவணி 19, 2025
இலங்கை

தொடரும் இனவழிப்பு ! முல்லைத்தீவில் இராணுவத்தினரால் துரத்தி துரத்தி தாக்குதல்

ஆவணி 9, 2025
அறிவியல் & தொழில்நுட்பம்இலங்கை

தேசிய மட்ட கணித ஒலிம்பியாட் – சர்வதேச போட்டிக்கு தெரிவான திருக்கோணமலை மாணவன்

ஆவணி 13, 2025
இலங்கைதிருக்கோணமலை

திருகோணமலை மாவட்டச் செயலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம்

ஆடி 29, 2025
Trinco MirrorTrinco Mirror
Follow US
© 2025 Trinco Mirror Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • நிகழ்வுகள்
  • ஆவணங்கள்
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?