Trinco Mirror
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • திருக்கோணமலை
    • உலகம்
    • ஆய்வுக் கட்டுரை
    • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • ஆவணங்கள்
  • அமைப்புகள்
Listen Live
Font ResizerAa
Trinco Mirror
Listen
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • திருக்கோணமலை
    • உலகம்
    • ஆய்வுக் கட்டுரை
    • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • ஆவணங்கள்
  • அமைப்புகள்
Follow US

திருகோணமலை இந்துக் கல்லூரி மாணவனின் ஜனாதிபதி சாரணர் விருதுக்கான சமூக செயற்திட்டம் வெற்றிகரமாக முன்னெடுப்பு!

ஆடி 19, 2026
இலங்கை திருக்கோணமலை
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

திருகோணமலை இந்துக் கல்லூரியின் தகுதிவாய்ந்த சாரண மாணவரான தரிசனன் சபிலாஷ், தனது ஜனாதிபதி சாரணர் விருதுக்கான (President’s Scout Award) சமூக சேவை செயற்திட்டத்தினை இன்று (19) அன்புவழிபுரம் கிராமத்தில் வெற்றிகரமாக முன்னெடுத்திருந்தார்.

அன்புவழிபுரம் பகுதியில் பொதுமக்களின் பாதுகாப்பையும் மேம்பாட்டையும் உறுதிசெய்யும் நோக்கில் இரு முக்கிய திட்டங்கள் இதன்போது நடைமுறைப்படுத்தப்பட்டன.

விபத்துகளைத் தடுக்க குவிவு ஆடி (Convex Mirror) பொருத்தம்: அன்புவழிபுரம் பிரதான வீதியின் ஆபத்தான வளைவுப் பகுதியில், தொடர்ச்சியாக ஏற்படும் வாகன விபத்துகளைக் குறைக்கும் முகமாக பெரிய அளவிலான குவிவு ஆடி (Convex Mirror) ஒன்று சபிலாஷின் முயற்சியால் பொருத்தி வைக்கப்பட்டது. இதன் மூலம் வளைவுகளில் வரும் வாகனங்களை முன்கூட்டியே அவதானிக்க முடிவதால், இப்பகுதிக்கான விபத்து அபாயம் கணிசமாகக் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நூலகத்திற்குப் புத்தக அலமாரி மற்றும் நூல்கள் வழங்கி வைப்பு: அதேவேளை, இப்பகுதி மாணவர்களினதும் பொதுமக்களினதும் வாசிப்புத் திறனை ஊக்குவிக்கும் நோக்கில், அன்புவழிபுரம் பொது நூலகத்திற்குப் புத்தகங்களை அடுக்கி வைப்பதற்கான மர இறாக்கை (Book Rack) மற்றும் பெறுமதிமிக்க நூல்களும் அவராலேயே வழங்கி வைக்கப்பட்டன.

இந்நிகழ்வில் திருகோணமலை இந்துக் கல்லூரியின் அதிபர் திரு. பிரகாஷ், உப்புவெளி பொலிஸ் நிலையத்தின் போக்குவரத்துப் பிரிவு பொறுப்பதிகாரி, உப்புவெளி பிரதேச சபை உறுப்பினர் திரு. தன்ராஜ் மற்றும் 2ஆம் திருமலை சாரணப் பிரிவின் மாவட்ட சாரணத் தலைவர் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள், சமூக ஆர்வலர்கள் எனப் பலர் கலந்துகொண்டு மாணவனின் இந்த முன்மாதிரியான சமூகப் பணியைப் பாராட்டியிருந்தனர்.

இச்சமூக செயற்திட்டமானது, ஜனாதிபதி சாரணர் விருதுக்கான தகைமைகளில் ஒன்றாகக் கருதப்படும் ‘சமூக மேம்பாட்டுப் பணி’ (Community Service Project) என்பதன் கீழ் உத்தியோகபூர்வமாக நிறைவேற்றப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Your Ad Here
Place your ads on our website

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
வியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனி
AdvertisementSidebar Ad 2

தொடர்புடைய செய்திகள்

திருக்கோணமலை

திருகோணமலை பிரீமியர் லீக் 2026: ‘Alex’ அணி சம்பியன் பட்டம் வென்று சாதனை!

சித்திரை 23, 2026
இலங்கைதிருக்கோணமலை

மாகாண மட்ட வலைப்பந்தாட்டப் போட்டிகளில் மூதூர் கலைமகள் இந்துக் கல்லூரி மாணவிகள் பல்வேறு பிரிவுகளில் சாதனை

ஆவணி 13, 2025
இலங்கைதிருக்கோணமலை

திருக்கோணமலை கரையோரங்களை அண்டிய கட்டிடங்களை அகற்றக்கோரி உத்தரவு

ஆவணி 12, 2025
இலங்கைதிருக்கோணமலை

திருகோணமலையின் அபிவிருத்தி வாய்ப்புகள் குறித்து ஜெர்மனி தூதுவருடன் திருகோணமலை மாவட்ட வர்த்தக சம்மேளனம் கலந்துரையாடல்

ஆனி 2, 2026
Trinco MirrorTrinco Mirror
Follow US
© 2025 Trinco Mirror Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • நிகழ்வுகள்
  • ஆவணங்கள்
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?