Trinco Mirror
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • திருக்கோணமலை
    • உலகம்
    • ஆய்வுக் கட்டுரை
    • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • ஆவணங்கள்
  • அமைப்புகள்
Listen Live
Font ResizerAa
Trinco Mirror
Listen
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • திருக்கோணமலை
    • உலகம்
    • ஆய்வுக் கட்டுரை
    • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • ஆவணங்கள்
  • அமைப்புகள்
Follow US

தம்பலகாமம், கிண்ணியா கால்நடைப் பண்ணையாளர்களின் மேய்ச்சல் நிலப் பிரச்சினைக்குத் தீர்வு – பிரதியமைச்சர் அருண் ஹேமச்சந்திரா

கார்த்திகை 8, 2026
இலங்கை திருக்கோணமலை
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

திருகோணமலை மாவட்டத்தின் தம்பலகாமம் மற்றும் கிண்ணியா பகுதிகளில் கால்நடைப் பண்ணையாளர்கள் நீண்டகாலமாக எதிர்கொண்டு வரும் மேய்ச்சல் நிலப் பிரச்சினைக்குத் தீர்வு காண்பதில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக பிரதியமைச்சர் அருண் ஹேமச்சந்திரா தெரிவித்துள்ளார்.

இதன்படி, சுமார் 46 ஆண்டுகளாகத் தீர்வின்றி நீடித்து வந்த தம்பலகாமம் கால்நடைப் பண்ணையாளர்களின் பிரச்சினைக்குத் தீர்வாக, கடவானை மற்றும் அட்டவானை குளங்களை அண்மித்த பகுதிகளில் கால்நடைகளை மேய்ச்சலுக்கு அனுமதிக்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. இதன் ஒரு பகுதியாக, பல கால்நடைக் கூட்டங்கள் ஏற்கனவே குறித்த பகுதிகளுக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதுடன், ஏனைய கால்நடைகளையும் கட்டம் கட்டமாகக் கொண்டு செல்வதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.

2023ஆம் ஆண்டு முதல் இப்பிரச்சினைக்குத் தீர்வுகாண தொடர்ச்சியான முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டு வந்த நிலையில், மாவட்டச் செயலகம், கிழக்கு மாகாண ஆளுநர், மாவட்டச் செயலாளர் மற்றும் சம்பந்தப்பட்ட அரச திணைக்களங்களின் ஒருங்கிணைப்புடன் தீர்வுக்கான நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன. குறிப்பாக, 2026 நவம்பர் 5ஆம் திகதி சுற்றாடல் அமைச்சில் நடைபெற்ற கலந்துரையாடலும் இம்முயற்சிகளுக்கு வலுசேர்த்துள்ளது.

இதேவேளை, கிண்ணியா பகுதி கால்நடைப் பண்ணையாளர்களின் பருவகால மேய்ச்சல் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக, கந்தளாய் சீனித் தொழிற்சாலைக்குச் சொந்தமான பொருத்தமான காணிகளைப் பயன்படுத்துவதற்கான அனுமதிகளும் பெறப்பட்டுள்ளன. அதற்கமைய, கால்நடைகளை அப்பகுதிகளுக்கு மாற்றும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

கால்நடைப் பண்ணையாளர்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாப்பதுடன், சுற்றுச்சூழல், வனவளம், நீர்வளங்கள் மற்றும் ஏனைய சமூகங்களின் நலன்களையும் பாதிக்காத வகையில், சட்ட விதிமுறைகளுக்கு உட்பட்டு இத்திட்டம் தொடர்ந்து நடைமுறைப்படுத்தப்படும் என பிரதியமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.

Your Ad Here
Place your ads on our website

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
சனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்
AdvertisementSidebar Ad

தொடர்புடைய செய்திகள்

இலங்கை

குமணன் மீதான அச்சுறுத்தலை எதிர்த்து பாராளுமன்ற சுற்றுவட்டத்தில் நாளை ஆர்ப்பாட்டம்

ஆவணி 21, 2025
இலங்கைமுதன்மை செய்தி

நீதிக்கான குரல் – நூதனப் போராட்டம் ‘விடுதலை’

ஆடி 26, 2025
இலங்கைதிருக்கோணமலை

திருகோணமலை திரியாய் 05ம் வட்டாரத்தில் ஆணொருவனின் சடலம் மீட்பு!!

ஆவணி 9, 2025
இலங்கைதிருக்கோணமலை

மன்னார் “கருநிலம்” போராட்டத்திற்கு ஆதரவாக திருகோணமலையில் கவனயீர்ப்பு

ஆவணி 6, 2025
Trinco MirrorTrinco Mirror
Follow US
© 2025 Trinco Mirror Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • நிகழ்வுகள்
  • ஆவணங்கள்
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?