திருகோணமலையில் இந்திய உயர்ஸ்தானிகராலயத்தினால் விசேட தூதரக சேவை முகாம் ஒன்று எதிர்வரும் ஒக்டோபர் 26ஆம் திகதி திங்கட்கிழமை நடைபெறவுள்ளது.
கொழும்பிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயத்தினால் பொதுமக்களின் நலன் கருதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இம்முகாமில், வெளிநாட்டு இந்தியக் குடியுரிமை அட்டை (OCI), கடவுச்சீட்டு சேவைகள், ஆவணச் சான்றுறுதிப்படுத்தல் உள்ளிட்ட பல்வேறு தூதரக சேவைகள் வழங்கப்படவுள்ளன.
குறித்த முகாம் திருகோணமலை மாநகர சபை மண்டபத்தில் காலை 10.00 மணி முதல் பிற்பகல் 2.00 மணி வரை நடைபெறவுள்ளது.
இந்திய தூதரக சேவைகளைப் பெற்றுக்கொள்ள விரும்புவோர் மற்றும் தூதரக நடைமுறைகள் தொடர்பில் சந்தேகங்கள் அல்லது மேலதிக விளக்கங்கள் தேவைப்படுவோர் இம்முகாமில் கலந்துகொண்டு இந்திய உயர்ஸ்தானிகராலய அதிகாரிகளிடம் நேரடியாகத் தெளிவுபடுத்தல்களைப் பெற்றுக்கொள்ள முடியும்.
நிகழ்வு விபரங்கள்:
- திகதி: 26 ஒக்டோபர் 2026, திங்கட்கிழமை
- நேரம்: காலை 10.00 மணி – பிற்பகல் 2.00 மணி
- இடம்: திருகோணமலை மாநகர சபை மண்டபம்
இச்சேவைகள் தேவைப்படும் பொதுமக்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

