திருகோணமலை, உவர்மலை சமூகக் கற்கை நிலையத்தில் எழுத்தாளர் கே. டானியலின் நூற்றாண்டு விழா இன்று (18.10.2026) ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 3.30 மணிக்கு நடைபெறவுள்ளது.
திருமலை நவம் தலைமையில் நடைபெறவுள்ள இந்நிகழ்வில், எழுத்தாளர் கே. டானியலின் இலக்கியப் பங்களிப்புகள் மற்றும் படைப்புகள் தொடர்பான கருத்துரைகள் இடம்பெறவுள்ளன.
இதன்போது, திருகோணமலைத் தமிழ்ச்சங்கத் தலைவர் திருமலை நவம், எழுத்தாளர்களான ஷெல்டிசான் மற்றும் வி.பி. இளங்கோவன் ஆகியோர் கருத்துரைகளை வழங்கவுள்ளனர்.
மேலும், கே. டானியலின் படைப்புகள் குறித்த சிறப்புரைகளும் இடம்பெறவுள்ளன. பஞ்சமர் நாவலை முன்னிறுத்தி தலித் இலக்கியம் தொடர்பில் வ. முரளிதரன் உரையாற்றவுள்ளார். அத்துடன், ‘தண்ணீர்’ நாவல் குறித்த பார்வையையும் உ. சகுந்தரிகா முன்வைக்கவுள்ளார்.
இந்நிகழ்வில் சிறப்புரையை கருணாகரன் வழங்கவுள்ளதுடன், நன்றியுரையை டானியல் வசந்தன் நிகழ்த்தவுள்ளார்.
கே. டானியலின் இலக்கியப் பங்களிப்புகளை நினைவுகூரும் வகையிலும், அவரது படைப்புகள் குறித்த இலக்கிய உரையாடலை முன்னெடுக்கும் நோக்கிலும் இந்நூற்றாண்டு விழா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

