Trinco Mirror
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • திருக்கோணமலை
    • உலகம்
    • ஆய்வுக் கட்டுரை
    • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • ஆவணங்கள்
  • அமைப்புகள்
Listen Live
Font ResizerAa
Trinco Mirror
Listen
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • திருக்கோணமலை
    • உலகம்
    • ஆய்வுக் கட்டுரை
    • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • ஆவணங்கள்
  • அமைப்புகள்
Follow US

திருகோணமலையில் ASP சித்திரக் கலைக்கூட மாணவர்கள் வெளிப்புற சித்திரப் பயிற்சியில் ஈடுபாடு

பங்குனி 3, 2026
இலங்கை திருக்கோணமலை
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

திருகோணமலை நகரின் வரலாற்றுச் சிறப்புமிக்க கோட்டைப் பகுதியை அண்மித்த பகுதியில் அமைந்த ASP சித்திரக் கலைக்கூடத்தில் கற்கும் மாணவர்கள், நேற்று (02) திங்கட்கிழமை வெளிப்புற சித்திரப் பயிற்சியில் ஈடுபட்டனர்.

இப்பயிற்சியில் 35க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டதுடன், கலைக்கூடத்தின் ஆசிரியர் சுதர்சன் அவர்களின் வழிநடத்தலில் நிலக்காட்சி (Landscape) ஓவியங்களை வரைந்து நடைமுறை அனுபவத்தைப் பெற்றனர்.

கோட்டைப் பகுதியைச் சூழவுள்ள இயற்கைக் காட்சிகள், கடற்கரை பின்னணி மற்றும் வரலாற்று கட்டிட அமைப்புகளை கவனித்து அவற்றை ஓவிய வடிவில் பதிவு செய்வதே இந்நிகழ்வின் பிரதான நோக்கமாக இருந்தது. இதன் மூலம் மாணவர்கள் தங்களின் கலைத்திறனை மேம்படுத்துவதோடு, இயற்கையை நேரடியாகக் கவனித்து வரையும் திறனையும் வளர்த்துக்கொள்ளும் வாய்ப்பைப் பெற்றனர்.

இச்சந்தர்ப்பத்தில் கருத்து தெரிவித்த ஆசிரியர் சுதர்சன் அவர்கள், வெளிப்புற சூழலில் நடைபெறும் இத்தகைய பயிற்சிகள் மாணவர்களின் பார்வைத்திறன், நிறங்களின் உணர்வு மற்றும் ஒளி–நிழல் புரிதலை மேம்படுத்த உதவுகின்றன எனத் தெரிவித்தார். மேலும், வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடங்களை கலைப்படைப்புகளின் மூலம் பதிவு செய்வது மாணவர்களுக்கு சிறப்பான அனுபவமாக அமைகிறது என்றும் அவர் குறிப்பிட்டார்.

பயிற்சியில் கலந்து கொண்ட மாணவர்கள் உற்சாகத்துடன் ஓவியங்களில் ஈடுபட்டதுடன், பென்சிலை மட்டுமே பயன்படுத்தி தங்களின் படைப்பாற்றலை வெளிப்படுத்தினர்.

ASP சித்திரக் கலைக்கூடம் மாணவர்களின் கலைத்திறன் வளர்ச்சியை ஊக்குவிக்கும் வகையில் தொடர்ச்சியாக இத்தகைய வெளிப்புற பயிற்சிகளை ஏற்பாடு செய்து வருவது குறிப்பிடத்தக்கது.

Your Ad Here
Place your ads on our website

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு
AdvertisementSidebar Ad

தொடர்புடைய செய்திகள்

இலங்கைதிருக்கோணமலை

திருகோணமலை ரோட்டரி கழகத்தின் 47வது தலைவராக திரு. க. பிரபாகரன் பதவி ஏற்பு!!

ஆவணி 14, 2025
ஆய்வுக் கட்டுரைஇலங்கை

குமணன் ஒரு குறியீடு : தொடரும் ஒடுக்குமுறைகளுக்கு எதிராக போராட வேண்டியது காலத்தின் தேவை

ஆவணி 21, 2025
இலங்கைதிருக்கோணமலை

அரசியல் ரீதியாக அநாதையான திருகோணமலைச் சமூகம் அடிப்படைத் தேவைக்காகவும் மௌனம் கலைக்க தயாரில்லையா?

வைகாசி 26, 2026
இலங்கைதிருக்கோணமலை

சோகத்தில் ஆழ்த்திய குறிஞ்சாக்கேணி படகு விபத்தின் நான்காவது ஆண்டு நினைவு

கார்த்திகை 24, 2025
Trinco MirrorTrinco Mirror
Follow US
© 2025 Trinco Mirror Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • நிகழ்வுகள்
  • ஆவணங்கள்
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?