இலங்கை நாடாளுமன்றின் முதலாவது தமிழ் பேசும் எதிர்க்கட்சித் தலைவரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான அமரர் அப்பாப்பிள்ளை அமர்தலிங்கம் அவர்களின் 36வது நினைவேந்தல் நிகழ்வு இன்றைய தினம் மதியம் 2.00 மணியளவில் திருகோணமலை சர்வோதய மண்டபத்தில் அமிர்தலிங்கம் நற்பணி மன்ற ஏற்பாட்டில் இடம்பெற்றது.
இதன் போது தமிழர் விடுதலை கூட்டணியின் செயலாளர் நாயகம் ஆனந்த சங்கரி, ஆதரவாளர்கள், பிரதேசபை உறுப்பினர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டு அன்னாருக்கு அஞ்சலி செலுத்தினார்கள்.
அமரர் அப்பாப்பிள்ளை அமர்தலிங்கம் அவர்கள் சுட்டுக் கொல்லப்படும் போது தமிழர் விடுதலைக் கூட்டணியில் தலைவராக செயற்பட்டு வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
மங்கள விளக்கேற்றலுடன் ஆரம்பமான நிகழ்வு, தொடர்ந்து மலர் அஞ்சலி செலுத்தப்பட்டதோடு உரைகளும் இடம்பெற்றன.