Trinco Mirror
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • திருக்கோணமலை
    • உலகம்
    • ஆய்வுக் கட்டுரை
    • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • ஆவணங்கள்
  • அமைப்புகள்
Listen Live
Font ResizerAa
Trinco Mirror
Listen
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • திருக்கோணமலை
    • உலகம்
    • ஆய்வுக் கட்டுரை
    • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • ஆவணங்கள்
  • அமைப்புகள்
Follow US

திருகோணமலையில் இந்திய உயர்ஸ்தானிகராலயத்தின் விசேட தூதரக சேவை முகாம் – ஒக்டோபர் 26ஆம் திகதி

ஐப்பசி 24, 2026
இலங்கை திருக்கோணமலை
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

திருகோணமலையில் இந்திய உயர்ஸ்தானிகராலயத்தினால் விசேட தூதரக சேவை முகாம் ஒன்று எதிர்வரும் ஒக்டோபர் 26ஆம் திகதி திங்கட்கிழமை நடைபெறவுள்ளது.

கொழும்பிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயத்தினால் பொதுமக்களின் நலன் கருதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இம்முகாமில், வெளிநாட்டு இந்தியக் குடியுரிமை அட்டை (OCI), கடவுச்சீட்டு சேவைகள், ஆவணச் சான்றுறுதிப்படுத்தல் உள்ளிட்ட பல்வேறு தூதரக சேவைகள் வழங்கப்படவுள்ளன.

குறித்த முகாம் திருகோணமலை மாநகர சபை மண்டபத்தில் காலை 10.00 மணி முதல் பிற்பகல் 2.00 மணி வரை நடைபெறவுள்ளது.

இந்திய தூதரக சேவைகளைப் பெற்றுக்கொள்ள விரும்புவோர் மற்றும் தூதரக நடைமுறைகள் தொடர்பில் சந்தேகங்கள் அல்லது மேலதிக விளக்கங்கள் தேவைப்படுவோர் இம்முகாமில் கலந்துகொண்டு இந்திய உயர்ஸ்தானிகராலய அதிகாரிகளிடம் நேரடியாகத் தெளிவுபடுத்தல்களைப் பெற்றுக்கொள்ள முடியும்.

நிகழ்வு விபரங்கள்:

  • திகதி: 26 ஒக்டோபர் 2026, திங்கட்கிழமை
  • நேரம்: காலை 10.00 மணி – பிற்பகல் 2.00 மணி
  • இடம்: திருகோணமலை மாநகர சபை மண்டபம்

இச்சேவைகள் தேவைப்படும் பொதுமக்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

Your Ad Here
Place your ads on our website

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு
AdvertisementSidebar Ad 2

தொடர்புடைய செய்திகள்

இலங்கைதிருக்கோணமலை

திருகோணமலையில் தர்மபோதனை நிகழ்வுக்கான முன்னேற்பாடுகள் – உவர்மலை விளையாட்டு மைதானத்தில் அளவீட்டு நடவடிக்கைகள்

பங்குனி 1, 2026
இலங்கைதிருக்கோணமலை

அரசியல் ரீதியாக அநாதையான திருகோணமலைச் சமூகம் அடிப்படைத் தேவைக்காகவும் மௌனம் கலைக்க தயாரில்லையா?

வைகாசி 26, 2026
இலங்கைதிருக்கோணமலை

கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் திணைக்கள பணிப்பாளராக வைத்தியர் சரவணபவன் நியமனம்

ஆனி 17, 2026
இலங்கைதிருக்கோணமலை

கிழக்கு மாகாண வலைப்பந்தாட்ட சாம்பியன்களுக்கு தம்பலகாமத்தில் சிறப்பு வரவேவேற்பு

ஆவணி 13, 2025
Trinco MirrorTrinco Mirror
Follow US
© 2025 Trinco Mirror Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • நிகழ்வுகள்
  • ஆவணங்கள்
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?