Trinco Mirror
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • திருக்கோணமலை
    • உலகம்
    • ஆய்வுக் கட்டுரை
    • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • ஆவணங்கள்
  • அமைப்புகள்
Listen Live
Font ResizerAa
Trinco Mirror
Listen
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • திருக்கோணமலை
    • உலகம்
    • ஆய்வுக் கட்டுரை
    • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • ஆவணங்கள்
  • அமைப்புகள்
Follow US

போதைவஸ்து பாவனைக்கு எதிரான விழிப்புணர்வை வலுப்படுத்திய மரதன் ஓட்டப்போட்டி

ஐப்பசி 15, 2026
இலங்கை திருக்கோணமலை
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

மாணவர்கள் மற்றும் சமூகத்தில் போதைவஸ்து பாவனையின் தீமைகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதோடு, உடல்நலம் மற்றும் விளையாட்டு கலாசாரத்தை ஊக்குவிக்கும் நோக்கில் “போதைவஸ்து பாவனையை தடுப்போம்” என்ற கருப்பொருளின் கீழ் திருகோணமலையின் Trinco Fitness 1st Gym அமைப்பினால் கடந்த சனிக்கிழமை மரதன் ஓட்டப்போட்டி சிறப்பாக நடைபெற்றது.

இந்நிகழ்வில் திருகோணமலை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர், தம்பலகாமம் பிரதேச செயலாளர், துறைமுக பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி, வைத்திய அதிகாரி உள்ளிட்ட பல முக்கிய பிரமுகர்கள் அதிதிகளாகக் கலந்து கொண்டு நிகழ்வை சிறப்பித்தனர்.

உட்துறைமுக வீதியில் இருந்து ஆரம்பமான மரதன் ஓட்டப்போட்டி, தலைமையக பொலிஸ் நிலையம், மடத்தடி சந்தி, என்.சி. வீதி மற்றும் திருகோணமலை பிரதான கடற்கரை கோட்டை வீதி வழியாகச் சென்று மீண்டும் உட்துறைமுக வீதியில் நிறைவடைந்தது.

இப்போட்டியில் 60-க்கும் மேற்பட்ட பாடசாலை மாணவர்களும் இளைஞர்களும் இரு பிரிவுகளாக ஆர்வத்துடன் பங்கேற்றனர். போட்டியின் நிறைவில் வெற்றியாளர்களுக்கு பணப்பரிசுகள், பதக்கங்கள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டதுடன், பங்கேற்ற அனைவருக்கும் சான்றிதழ்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.

போதைவஸ்து பாவனையற்ற ஆரோக்கியமான சமூகத்தை உருவாக்கும் நோக்கில் இவ்வாறான விழிப்புணர்வு நிகழ்வுகள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட வேண்டியதன் அவசியமும் நிகழ்வில் வலியுறுத்தப்பட்டது.

Your Ad Here
Place your ads on our website

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளி
AdvertisementSidebar Ad

தொடர்புடைய செய்திகள்

இலங்கைதிருக்கோணமலை

SLCBC Premier Regional Excellence Awards 2026 விழாவில் திருகோணமலை மாவட்ட வர்த்தக சம்மேளனத்திற்கு கௌரவம்

ஆனி 24, 2026
இலங்கைதிருக்கோணமலை

திருகோணமலையில் யானை தாக்கி ஒருவர் பலி

ஆடி 26, 2025
இலங்கைதிருக்கோணமலை

திருகோணமலையில் யானைத் தாக்குதல்: வயதானவர் உயிரிழப்பு!

ஆவணி 31, 2025
இலங்கைதிருக்கோணமலை

கந்தளாய் காட்டில் 4 ஏக்கர் கஞ்சா தோட்டம் கண்டுபிடிப்பு – சிறப்பு அதிரடிப்படையினரால் சுற்றி வளைப்பு

ஆடி 30, 2025
Trinco MirrorTrinco Mirror
Follow US
© 2025 Trinco Mirror Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • நிகழ்வுகள்
  • ஆவணங்கள்
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?