இலங்கையின் மாவட்ட மற்றும் பிரதேச செயலகங்களினால் வழங்கப்படும் பொதுச் சேவைகள் தொடர்பான மக்களின் அனுபவங்கள், கருத்துக்கள் மற்றும் பரிந்துரைகளைப் பெற்றுக்கொள்வதற்காக ஐக்கிய நாடுகள் அபிவிருத்தித் திட்டத்தின் (UNDP) ஆதரவுடன் ‘ஜனரிதம்’ (SL-PULSE) என்ற கருத்துப் பகிர்வு முயற்சி முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இம்முயற்சியின் ஊடாக, அரச சேவைகளைப் பெற்றுக்கொள்ளும்போது மக்கள் எதிர்கொள்ளும் சவால்கள், சேவைகளின் தரம் மற்றும் அவற்றை மேம்படுத்துவதற்கான பரிந்துரைகள் குறித்து பொதுமக்கள் தமது கருத்துக்களைப் பகிர்ந்துகொள்ள முடியும்.
மக்களின் நேரடி அனுபவங்கள் மற்றும் கருத்துக்களை அடிப்படையாகக் கொண்டு அரச சேவைகளில் வெளிப்படைத்தன்மை, பொறுப்புக்கூறல் மற்றும் நல்லாட்சியை வலுப்படுத்துவதே இம்முயற்சியின் முக்கிய நோக்கமாகும்.
இதற்காகப் பொதுமக்கள் இணையவழிப் படிவத்தின் ஊடாகத் தமது கருத்துக்களைப் பதிவு செய்ய முடியும். குறிப்பாக, மாவட்ட மற்றும் பிரதேச செயலகங்களின் சேவைகளைப் பயன்படுத்தியவர்கள் தங்களது அனுபவங்களையும் பரிந்துரைகளையும் பகிர்ந்துகொள்ளுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
கருத்துக்களைப் பதிவு செய்வதற்கான இணைப்பு:
https://ee-kobo.undp.org/x/yhI2d1H1
பொதுமக்களின் பங்கேற்பு சிறந்த பொதுச் சேவைகளை உருவாக்குவதற்கும், அரச நிறுவனங்களின் சேவைத் தரத்தை மேம்படுத்துவதற்கும் முக்கிய பங்களிப்பாக அமையும் என இம்முயற்சியின் ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.

