வரலாற்றுப் பெருமையும் புராணப்புகழும் கொண்ட திருக் கோணேஷ்வரம் மற்றும் அதே பெருமை கொண்ட கன்னியா வெந்நீரூற்று. கங்குவேலி அகத்தியர் ஸ்தாபனம் ஆகிய திருகோணமலையின் தொன்மை சார்ந்த அடையாளங்கள் பற்றிய மூன்று கட்டுரைகள் இந் நூலில் இடம்பெற்றுள்ளன. இவை மூன்றும் தனித்தனி கட்டுரையாக அமைந்திருப்பினும் அதன் வரலாற்றுப் பின்புலத்தில் மூன்றுக்கும் தவிர்க்கவியலாத ஒரு ஒற்றுமை உண்டு. திருகோணமலை மண்ணின் வரலாற்றுடன் இவை பின்னிப் பிணைந்தவை. இராவணதேசத்து எச்சங்கள் இவை.