Trinco Mirror
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • திருக்கோணமலை
    • உலகம்
    • ஆய்வுக் கட்டுரை
    • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • ஆவணங்கள்
  • அமைப்புகள்
Listen Live
Font ResizerAa
Trinco Mirror
Listen
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • திருக்கோணமலை
    • உலகம்
    • ஆய்வுக் கட்டுரை
    • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • ஆவணங்கள்
  • அமைப்புகள்
Follow US

GovPay பயன்படுத்தும் முறை

சித்திரை 12, 2025
இலங்கை
படிக்க 2 நிமிடங்கள்
SHARE

போக்குவரத்து விதிமீறல்களுக்காக பொலிஸாரினால் வழங்கப்படும் அபராத சீட்டினை சாரதிகள் ஒன்லைனில் செலுத்த அனுமதிக்கும் முன்னோடி திட்டம் குறித்தான விளக்கம் இன்று வழங்கப்பட்டது.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் உரையாற்றிய ICTA இன் பணிப்பாளர் சபையின் உறுப்பினர் ஹர்ஷ புரசிங்க, குருநாகல் முதல் அனுராதபுரம் வரையிலான 11 பொலிஸ் நிலையங்களை இணைத்து இந்த முன்னோடி திட்டம் மேற்கொள்ளப்பட்டதாக தெரிவித்தார்.

இதற்கமைய ஆரம்பிக்கப்பட்டுள்ள முன்னோடித் திட்டத்தை எதிர்காலத்தில் நாடு முழுவதும் செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.புழஎநியல வழியாக அபராதத்தை எவ்வாறு செலுத்துவது என்பது குறித்த துண்டுப்பிரசும் தயாரிக்கப்பட்டுள்ளது.

அபராத பத்திரத்திற்கு மேலதிகமாக அந்த துண்டுப்பிரசுரம் வழங்கப்படும். அதில் எவ்வாறு பணம் செலுத்துவது என்பது குறித்து படிப்படியாக விளக்கப்பட்டுள்ளது. ஒன்லைன் வங்கி வசதி அல்லது வங்கி மொபைல் செயலி மூலம் உடனடியாக இந்தக் கட்டணத்தைச் செலுத்தலாம்.

GovPay தேர்ந்தெடுக்கப்படும் போது, முன்னர் பட்டியலிடப்பட்ட நிறுவனங்களுக்கு கூடுதலாக, இலங்கை பொலிஸை தேர்ந்தெடுத்து அங்கு போக்குவரத்து அபராத பகுதிக்கு சென்றால் அபராதத்தை செலுத்தும் படிவம் டிஜிட்டல் முறையில் காட்டப்படும். அதில் தேவையானவற்றை நிரப்ப வேண்டும்.

உங்கள் வாகன இலக்கத் தகட்டின் எண், சாரதி அனுமதிப் பத்திர எண், அபராத பத்திரத்தில் உள்ள குறிப்பு எண் மற்றும் அனைத்து குற்றங்களையும் பட்டியலிடும் ஒரு கீழ்தோன்றும் பட்டியல் உள்ளது, அதில் இருந்து உங்களுக்கு எந்தக் குற்றம் பொருந்தும் என்பதை நீங்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.

பொலிஸாரின் வேண்டுகோளின் பேரில் நாங்கள் விசேட பணியைச் செய்தோம். இப்போது ஒருவருக்கு இரண்டு அபராதங்களை விதிக்க முடியும். நீங்கள் இரண்டு அல்லது மூன்று தேர்வு செய்யலாம். தேர்ந்தெடுக்கப்படும்போது, தொகை தானாகவே காட்டப்படும்.

ஒவ்வொரு பொலிஸ் நிலையத்திற்கும் மொபைல் போன்களை வழங்கியுள்ளோம். அந்த எண்ணை உள்ளிட்டு பணம் செலுத்தப்படல் வேண்டும். உடனடியாக ஒரு ரசீது அனுப்பப்படும். பணம் பெறப்பட்டதை உறுதிப்படுத்தும் வகையில், GovPay என்ற குறுகிய குறியீட்டின் கீழ், பொலிஸ் அதிகாரி உடனடியாக ஒரு குறுஞ்செய்தியைப் பெறுவார்.

அந்த செய்தியில் எல்லா விபரங்களும் உள்ளன. பின்னர் நீங்கள் உங்க சாரதி அனுமதிப் பத்திரத்தை பெற முடியுமென அவர் தெரிவித்தார்.

Your Ad Here
Place your ads on our website

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு
AdvertisementSidebar Ad 2

தொடர்புடைய செய்திகள்

இலங்கை

யாழ்ப்பாண மாவட்டத்தில் சங்கின் ஆதரவை பெற முஸ்தீபு..!!

வைகாசி 9, 2025
இலங்கை

மழையும் வெயிலும்

சித்திரை 12, 2025
இலங்கை

6ஆம் திகதி இலங்கையர்களுக்கு விடுமுறை! வெளியான முக்கிய அறிவிப்பு

வைகாசி 4, 2025
Trinco MirrorTrinco Mirror
Follow US
© 2025 Trinco Mirror Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • நிகழ்வுகள்
  • ஆவணங்கள்
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?