Trinco Mirror
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • திருக்கோணமலை
    • உலகம்
    • ஆய்வுக் கட்டுரை
    • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • ஆவணங்கள்
  • அமைப்புகள்
Listen Live
Font ResizerAa
Trinco Mirror
Listen
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • திருக்கோணமலை
    • உலகம்
    • ஆய்வுக் கட்டுரை
    • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • ஆவணங்கள்
  • அமைப்புகள்
Follow US

மன்னிப்பு கோரிய கஸ்ஸப்ப தேரர்; நிபந்தனைகளுடன் பிணை வழங்கிய திருகோணமலை நீதிவான் நீதிமன்றம்

கார்த்திகை 18, 2026
இலங்கை திருக்கோணமலை
படிக்க 2 நிமிடங்கள்
SHARE

பிடியாணை பிறப்பிக்கப்பட்ட நிலையில் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட பலாங்கொடை கஸ்ஸப்ப தேரருக்கு, திருகோணமலை நீதிவான் நீதிமன்றம் கடுமையான நிபந்தனைகளுடன் பிணை வழங்கியுள்ளது.

திருகோணமலை நீதிவான் நீதிமன்றில் 2026 நவம்பர் 17 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை முன்னிலையான கஸ்ஸப்ப தேரர், தாம் முன்னர் தெரிவித்த கருத்துக்கள் மற்றும் நீதிமன்ற உத்தரவு தொடர்பான செயற்பாடுகளுக்கு மன்னிப்பு கோரியதையடுத்து, ஒரு இலட்சம் ரூபாய் ரொக்கப் பிணையிலும் ஒரு ஆள் பிணையிலும் செல்ல நீதிமன்றம் அனுமதி வழங்கியது.

எனினும், அனுராதபுரம் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள மற்றுமொரு வழக்கு தொடர்பில் அவர் சிறையில் இருந்து வருவதால், சிறைச்சாலை அதிகாரிகளினால் மீண்டும் திருகோணமலை சிறைச்சாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

இன்றைய விசாரணையின் போது, தனக்கு விதிக்கப்பட்ட பிணை நிபந்தனைகளை மீறியுள்ளதாகவும், அனுராதபுரத்தில் இருந்தபோது திருகோணமலை நீதிவான் நீதிமன்றத்தையும் நீதிபதியையும் அவமதிக்கும் வகையில் கருத்துக்களை வெளியிட்டுள்ளதாகவும் கஸ்ஸப்ப தேரர் தனது சட்டத்தரணி ஊடாக நீதிமன்றில் ஏற்றுக்கொண்டு அதற்காக மன்னிப்பு கோரினார்.

இதனையடுத்து, எதிர்காலத்தில் குறித்த வழக்கு தொடர்பாகவோ அல்லது நீதிபதிகள் தொடர்பாகவோ அவமரியாதையான கருத்துக்களை ஊடகங்கள் அல்லது பொது வெளிகளில் வெளியிடக்கூடாது என நீதிமன்றம் உத்தரவிட்டது.

மேலும், பொது அமைதி, சமய நல்லிணக்கம் மற்றும் சமூக ஒற்றுமைக்கு பாதிப்பு ஏற்படுத்தக்கூடிய எந்தவொரு கருத்துக்களையும் வெளியிடக்கூடாது எனவும், வழக்கின் அனைத்து விசாரணைத் தவணைகளிலும் தவறாது முன்னிலையாக வேண்டும் எனவும் நீதிமன்றம் கடுமையான நிபந்தனைகளை விதித்தது.

இந்த நிபந்தனைகளை மீறினால் வழங்கப்பட்ட பிணை இரத்து செய்யப்பட்டு மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட நேரிடும் எனவும் நீதிவான் தனது உத்தரவில் குறிப்பிட்டார்.

இதற்கிடையில், கடந்த 2026 நவம்பர் 11 ஆம் திகதி நடைபெற்ற வழக்கு விசாரணைக்கு முன்னிலையாகாத காரணத்தினால் கஸ்ஸப்ப தேரருக்கு எதிராக திருகோணமலை நீதிவான் நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்திருந்தது.

அதனைத் தொடர்ந்து, 2026 நவம்பர் 16 ஆம் திகதி நீதிமன்றில் முன்னிலையான கஸ்ஸப்ப தேரரை பிணையில் விடுவிக்கக் கூடாது என திருகோணமலை துறைமுக பொலிஸார் கோரிக்கை விடுத்திருந்தனர்.

அத்துடன், நீதிமன்றத்தையும் நீதித்துறையையும் அவமதிக்கும் வகையில் கருத்துக்கள் வெளியிட்டமை தொடர்பில் நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்தரப்பு சட்டத்தரணிகளும் கோரிக்கை முன்வைத்திருந்தனர்.

இதனை பரிசீலித்த நீதிமன்றம், மேலதிக விசாரணைக்காக வழக்கை 2026 நவம்பர் 17 ஆம் திகதிக்கு ஒத்திவைத்திருந்த நிலையில், இன்று கஸ்ஸப்ப தேரருக்கு நிபந்தனைகளுடன் பிணை வழங்கப்பட்டுள்ளது.

Your Ad Here
Place your ads on our website

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்
AdvertisementSidebar Ad

தொடர்புடைய செய்திகள்

இலங்கைதிருக்கோணமலை

திருகோணமலையில் இந்திய உயர்ஸ்தானிகராலயத்தின் விசேட தூதரக சேவை முகாம் – ஒக்டோபர் 26ஆம் திகதி

ஐப்பசி 24, 2026
இலங்கைதிருக்கோணமலை

மூதூர் விபத்தில் தோப்பூரை சேர்ந்த 33 வயதான நபர் மரணம்!!

ஆவணி 9, 2025
இலங்கை

உயிர்த்த ஞாயிறு அனர்த்தம்: இந்த அரசாங்கத்தின் மீது அழுத்தம் இருக்கிறதா என்ற சந்தேகம் எழுகிறது சபையில் முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் எம்.பி

சித்திரை 12, 2026
இலங்கை

குழந்தையை அணைத்த படி என்புத் தொகுதி : நிலைகுலையச் செய்யும் செம்மணி

ஆடி 31, 2025
Trinco MirrorTrinco Mirror
Follow US
© 2025 Trinco Mirror Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • நிகழ்வுகள்
  • ஆவணங்கள்
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?