Trinco Mirror
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • திருக்கோணமலை
    • உலகம்
    • ஆய்வுக் கட்டுரை
    • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • ஆவணங்கள்
  • அமைப்புகள்
Listen Live
Font ResizerAa
Trinco Mirror
Listen
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • திருக்கோணமலை
    • உலகம்
    • ஆய்வுக் கட்டுரை
    • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • ஆவணங்கள்
  • அமைப்புகள்
Follow US

மூதூர் JMI நிறுவனத்தின் 10ஆம் ஆண்டு நிறைவை முன்னிட்டு மாபெரும் “MUTUR JMI EXPO” மற்றும் இளம் எழுத்தாளர்களுக்கான கௌரவிப்பு விருதுகள் அறிவிப்பு

ஐப்பசி 17, 2026
இலங்கை திருக்கோணமலை
படிக்க 2 நிமிடங்கள்
SHARE

மூதூர் JMI (Pvt) Ltd நிறுவனம் தனது 10ஆம் ஆண்டு நிறைவை முன்னிட்டு “MUTUR JMI EXPO” எனும் மாபெரும் கண்காட்சியை எதிர்வரும் ஒக்டோபர் 23 முதல் 26 ஆம் திகதி வரை மூதூர் நகரில் நடத்தவுள்ளதாக அறிவித்துள்ளது.

நான்கு நாட்கள் நடைபெறவுள்ள இக்கண்காட்சி கல்வி, இலக்கியம், வணிகம் மற்றும் சமூக முன்னேற்றம் உள்ளிட்ட பல்வேறு துறைகளை ஒருங்கிணைக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதுடன், பொதுமக்கள், மாணவர்கள், இளைஞர்கள் மற்றும் இலக்கிய ஆர்வலர்களின் பங்களிப்பை ஊக்குவிக்கும் பல்வேறு நிகழ்ச்சிகளும் இடம்பெறவுள்ளதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.

அதன் ஒரு பகுதியாக, “இளம் எழுத்தாளர்களுக்கான கௌரவிப்பு விருதுகள்” என்ற சிறப்பு நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதுடன், புதிய தலைமுறை எழுத்தாளர்களை அடையாளம் கண்டு கௌரவிக்கும் நோக்கில் விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.

இவ்விருதுத் திட்டத்திற்கு விண்ணப்பிக்க விரும்புவோர் பின்வரும் தகைமைகளைப் பூர்த்தி செய்திருக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

  • இலக்கியத் துறையில் குறைந்தபட்சம் ஒரு நூலை வெளியிட்டிருக்க வேண்டும்.
  • விண்ணப்பதாரரின் வயது 16 முதல் 33 வயதிற்குள் இருக்க வேண்டும்.
  • சங்கங்கள், பத்திரிகைகள் மற்றும் மலர்களில் வெளியிடப்பட்ட இலக்கியப் படைப்புகள் தொடர்பான ஆதாரங்களை சமர்ப்பிக்க வேண்டும்.
  • Facebook, WhatsApp உள்ளிட்ட சமூக ஊடகங்களில் வெளியிடப்பட்ட இலக்கிய ஆக்கங்களையும் பரிசீலனைக்காக சமர்ப்பிக்க முடியும்.

விண்ணப்பதாரர்கள் Google Form மூலம் விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்து, வெளியிடப்பட்ட நூல்களின் விவரங்கள் மற்றும் A4 அளவிலான ஒரு புகைப்படத்துடன் தேவையான ஆவணங்களை இணைத்து அனுப்புமாறு ஏற்பாட்டாளர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

இந்நிகழ்வின் மூலம் இளம் எழுத்தாளர்களின் படைப்பாற்றலை வெளிக்கொணருவதோடு, அவர்களின் இலக்கியப் பங்களிப்பை சமூகத்தின் முன் கௌரவிக்கும் வாய்ப்பை உருவாக்குவதே பிரதான நோக்கமாகும் என ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும், கண்காட்சி மற்றும் விருதுத் திட்டம் தொடர்பான மேலதிக தகவல்களுக்கு 077 102 0030 அல்லது 071 789 1887 ஆகிய தொலைபேசி இலக்கங்களைத் தொடர்புகொள்ளலாம். அத்துடன் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரி அல்லது www.muturjmi.com இணையத்தளத்தின் ஊடாகவும் தகவல்களைப் பெற முடியும்.

மூதூர் JMI EXPO கண்காட்சியும், அதனுடன் இணைந்த இளம் எழுத்தாளர்களுக்கான கௌரவிப்பு நிகழ்வும், கிழக்கு மாகாணத்தின் இலக்கிய மற்றும் படைப்பாற்றல் துறைக்கு புதிய ஊக்கத்தை வழங்கும் முயற்சியாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Your Ad Here
Place your ads on our website

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு
AdvertisementSidebar Ad 2

தொடர்புடைய செய்திகள்

இலங்கைதிருக்கோணமலை

திருகோணமலையில் வைத்தியர்கள் பணிப்பகிஷ்கரிப்பில் !!

ஆவணி 8, 2025
இலங்கைதிருக்கோணமலை

திருகோணமலையின் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு புதிய அத்தியாயம்: Trincomalee Tech Hub உத்தியோகபூர்வமாக அங்குரார்ப்பணம்

ஆனி 15, 2026
இலங்கை

யாழ்ப்பாணத்திலிருந்து இந்தியா சென்ற இளைஞர்கள் கைது

ஆவணி 15, 2025
இலங்கை

கனிய மண் அகழ்வுக்கு எதிராக வெடிக்கும் மாபெரும் போராட்டம் – கருநிலம்

ஆவணி 4, 2025
Trinco MirrorTrinco Mirror
Follow US
© 2025 Trinco Mirror Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • நிகழ்வுகள்
  • ஆவணங்கள்
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?