Trinco Mirror
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • திருக்கோணமலை
    • உலகம்
    • ஆய்வுக் கட்டுரை
    • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • ஆவணங்கள்
  • அமைப்புகள்
Listen Live
Font ResizerAa
Trinco Mirror
Listen
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • திருக்கோணமலை
    • உலகம்
    • ஆய்வுக் கட்டுரை
    • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • ஆவணங்கள்
  • அமைப்புகள்
Follow US

கிழக்கு மாகாண மக்களின் பிரச்சினைகள் குறித்து சுவிச்சர்லாந்து இராஜதந்திரிகளுடன் AHRC கலந்துரையாடல்

ஆனி 12, 2026
இலங்கை திருக்கோணமலை
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

சுவிச்சர்லாந்து நாட்டின் இலங்கைக்கான தூதுவரும், அவுஸ்திரேலியா நாட்டின் இலங்கைக்கான உயர்ஸ்தானிகரும் கிழக்கு மாகாணத்திற்கான உத்தியோகபூர்வ விஜயத்தை இந்த வாரம் மேற்கொண்டிருந்தனர்.

இந்த விஜயத்தின் போது, இரு இராஜதந்திரிகளும் கிழக்கு மாகாணத்திலுள்ள உயர்மட்ட அரச அதிகாரிகள், சிவில் சமூக அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் அரசியல் ஆய்வாளர்களுடன் பல்வேறு சந்திப்புகளை மேற்கொண்டனர்.

அந்த வகையில், அகம் மனிதாபிமான வள நிலையம் (AHRC) அமைப்பின் சார்பில் பணிப்பாளர் திரு. கண்டுமணி லவகுசராசா மற்றும் பிரதிப் பணிப்பாளர் திரு. அழகுராசன் மதன் ஆகியோர் சுவிச்சர்லாந்து நாட்டின் இலங்கைக்கான தூதுவரை கடந்த ஜூன் 10 ஆம் திகதி திருகோணமலையில் உள்ள தனியார் விடுதியில் சந்தித்து கலந்துரையாடினர்.

அதேவேளை, ஜூன் 11 ஆம் திகதி மட்டக்களப்பில் இடம்பெற்ற மற்றுமொரு சந்திப்பில், அவுஸ்திரேலியா நாட்டின் இலங்கைக்கான உயர்ஸ்தானிகருடனும் AHRC பிரதிநிதிகள் கலந்துரையாடினர்.

இவ்விரு சந்திப்புகளின் போதும் கிழக்கு மாகாண மக்கள் எதிர்நோக்கும் மனித உரிமைச் சவால்கள், காணி உரிமைப் பிரச்சினைகள், வாழ்வாதார மீட்புத் தேவைகள், பொருளாதார நெருக்கடிகள் மற்றும் சமூக அபிவிருத்தி தொடர்பான விடயங்கள் குறித்து விரிவான கலந்துரையாடல்கள் இடம்பெற்றன.

மேலும், வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட தமிழ் பேசும் மக்களின் நீதி, பொறுப்புக்கூறல் மற்றும் அரசியல் தீர்வு தொடர்பான எதிர்பார்ப்புகளும் இவ்விரு வெளிநாட்டு இராஜதந்திரிகளின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டன.

இதன்போது, கிழக்கு மாகாணத்தில் காணிப் பிரச்சினைகளால் பாதிக்கப்பட்ட மக்களின் நிலைமைகள் மற்றும் அவர்கள் எதிர்கொள்ளும் சவால்கள் தொடர்பான ஆவணம் ஒன்றையும் AHRC பிரதிநிதிகள் கையளித்தனர்.

கிழக்கு மாகாண மக்களின் உரிமைகள், வாழ்வாதார முன்னேற்றம் மற்றும் நிலையான சமாதானம் தொடர்பான விடயங்களை சர்வதேச மட்டத்தில் எடுத்துரைக்கும் முயற்சிகளின் ஒரு பகுதியாக இச்சந்திப்புகள் அமைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

 

Your Ad Here
Place your ads on our website

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்
AdvertisementSidebar Ad 2

தொடர்புடைய செய்திகள்

இலங்கை

இலங்கையர்களுக்கு மகிழ்ச்சித் தகவல் ! திறக்கப்பட்டுள்ள வெளிநாட்டு வேலைவாய்ப்புக்கள்

ஆவணி 10, 2025
இலங்கைதிருக்கோணமலை

சோகத்தில் ஆழ்த்திய குறிஞ்சாக்கேணி படகு விபத்தின் நான்காவது ஆண்டு நினைவு

கார்த்திகை 24, 2025
இலங்கைதிருக்கோணமலை

மரண தண்டனை வழங்கிய திருகோணமலை மேல் நீதிமன்றம்

ஆவணி 6, 2025
இலங்கைதிருக்கோணமலை

திருகோணமலை அரச வங்கி ஊழியர்களால் இன்று கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம்

ஆவணி 12, 2025
Trinco MirrorTrinco Mirror
Follow US
© 2025 Trinco Mirror Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • நிகழ்வுகள்
  • ஆவணங்கள்
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?