2025 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 07, 08, 09 தேதிகளில் கிழக்கு பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெற்ற திருக்கோணமலை மாவட்ட சாரணர் ஒன்றுகூடல் நிகழ்வில், இவ்வாண்டிற்கான திருக்கோணமலை மாவட்டத்தின் சிறந்த சாரணர் துருப்பாக திருக்கோணமலை பாரதி தமிழ் வித்தியாலயம் தெரிவுசெய்யப்பட்டது.
இந்த வெற்றியை முன்னிட்டு, ஆண்டு தோறும் நடைபெறும் சாரணியப் பாசறை நிகழ்வில் வெற்றிக்கிண்ணம் வழங்கப்பட்டு கௌரவிக்கப்பட்டது.
இந்த வெற்றிக்கு உழைத்த அதிபர், ஆசிரியர்கள், சாரணர்கள், பெற்றோர்கள், சாரண தலைவர்கள் மற்றும் அனைவருக்கும் மனமார்ந்த வாழ்த்துகளையும் நன்றிகளையும் தெரிவித்துக்கொள்கின்றோம்.