Trinco Mirror
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • திருக்கோணமலை
    • உலகம்
    • ஆய்வுக் கட்டுரை
    • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • ஆவணங்கள்
  • அமைப்புகள்
Listen Live
Font ResizerAa
Trinco Mirror
Listen
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • திருக்கோணமலை
    • உலகம்
    • ஆய்வுக் கட்டுரை
    • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • ஆவணங்கள்
  • அமைப்புகள்
Follow US

தேசிய ஊழல் எதிர்ப்பு செயல் திட்டப் பிரதானிகளுடன் கலந்துரையாடல்

ஆடி 31, 2025
இலங்கை
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

தேசிய ஊழல் எதிர்ப்பு செயல் திட்டம் 2025-2029 செயல்படுத்தப்படுவதை மேற்பார்வையிட நியமிக்கப்பட்ட தேசிய செயற் குழு மற்றும் அது குறித்து பொறுப்புகள் வழங்கப்பட்டுள்ள அரச மற்றும் தனியார் துறை நிறுவனங்களின் பிரதானிகளுடனான கலந்துரையாடல் ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க தலைமையில் ஜனாதிபதி அலுவலகத்தில் நேற்று (30) பிற்பகல் நடைபெற்றது.

‘வளமான நாட்டை நோக்கி’ என்ற தொனிப்பொருளின் கீழ் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் எண்ணக்கருவின்படி ஏப்ரல் 09 ஆம் திகதி ‘தேசிய ஊழல் எதிர்ப்பு செயல் திட்டம்’ ஆரம்பிக்கப்பட்டதுடன், இது 2025 ஆம் ஆண்டு முதல் அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

தேசிய ஊழல் எதிர்ப்பு செயல் திட்டத்தில் உள்ளடக்கப்பட்டுள்ள செயல்பாடுகள் தொடர்பான பொறுப்புகள் வழங்கப்பட்டுள்ள அனைத்து நிறுவனங்களின் பிரதானிகள், அவர்களுக்கு வழங்கப்பட்ட பொறுப்புகளை நிறைவேற்ற அவர்கள் செயற்பாட்டுத் திட்டத்தைத் தயாரிக்க வேண்டும் என்றும், அந்த செயற்பாட்டு திட்டங்களின் முன்னேற்றத்தை தேசிய செயற் குழு அவ்வப்போது மீளாய்வு செய்ய வேண்டும் என்றும் ஜனாதிபதியின் செயலாளர் இங்கு சுட்டிக்காட்டினார்.

இந்த தேசிய செயற் குழு அரச மற்றும் தனியார் துறைகளின் பிரதிநிதிகளைக் கொண்டுள்ளதுடன், ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க இந்த குழுவின் தலைவராகவும், இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டு விசாரணை ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் ரங்க திஸாநாயக்க, குழுவின் உப தலைவர் மற்றும் அழைப்பாளராகவும் செயற்படுவார்கள்.

Your Ad Here
Place your ads on our website

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்
AdvertisementSidebar Ad

தொடர்புடைய செய்திகள்

இலங்கைதிருக்கோணமலை

திருகோணமலையில் சட்டவிரோதமாக மரக்குற்றிகளை லொறியில் ஏற்றிச்சென்ற இருவர் கைது!

ஆவணி 14, 2025
இலங்கைதிருக்கோணமலை

திருகோணமலை – வெருகல் பகுதியில் அரசியல் தீர்வை கோரி கவனயீர்ப்பு போராட்டம்

ஆவணி 3, 2025
இலங்கைதிருக்கோணமலை

மூதூர் ஆனைச்சேனையில் நீரில் மூழ்கிய நிலையில் மீனவரொருவரின் சடலம்

ஆடி 30, 2025
இலங்கைதிருக்கோணமலை

தி/இ.கி.ச ஸ்ரீ கோணேஸ்வர இந்துக்கல்லூரி பழைய மாணவர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவித்தல்

ஆவணி 20, 2025
Trinco MirrorTrinco Mirror
Follow US
© 2025 Trinco Mirror Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • நிகழ்வுகள்
  • ஆவணங்கள்
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?