Trinco Mirror
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • திருக்கோணமலை
    • உலகம்
    • ஆய்வுக் கட்டுரை
    • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • ஆவணங்கள்
  • அமைப்புகள்
Listen Live
Font ResizerAa
Trinco Mirror
Listen
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • திருக்கோணமலை
    • உலகம்
    • ஆய்வுக் கட்டுரை
    • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • ஆவணங்கள்
  • அமைப்புகள்
Follow US

பொதுமக்களின் ஒத்துழைப்புடன் சட்டவிரோதக் கட்டுமானங்கள் அகற்றப்பட்டன!

கார்த்திகை 15, 2026
இலங்கை திருக்கோணமலை
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

திருகோணமலை, சிறிமாபுரம் மற்றும் ஜமாலியா ஆகிய கரையோரப் பகுதிகளில் அமைக்கப்பட்டிருந்த சட்டவிரோதக் கட்டுமானங்களை அகற்றும் நடவடிக்கைக்கு பொதுமக்கள் தமது ஒத்துழைப்பை வழங்கியுள்ளனர்.

கரையோரப் பாதுகாப்புத் திணைக்களத்தினால் கடந்த வியாழக்கிழமை (12) ஆரம்பிக்கப்பட்ட இந்நடவடிக்கை, வெள்ளிக்கிழமை (13) மீண்டும் முன்னெடுக்கப்பட்டது.

சிறிமாபுரம் முதல் ஜமாலியா மற்றும் திருக்கடலூர் வரையான கரையோரப் பகுதியில் மீன்பிடித் திணைக்களத்தினால் வீதியொன்றை அமைப்பதற்கான திட்டத்தின் ஒரு பகுதியாக, குறித்த பகுதியில் காணப்பட்ட சட்டவிரோதக் கட்டுமானங்களை அகற்றும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

இதன்போது, தமது உடைமைகளை அகற்றுவதற்காக சிலர் கால அவகாசம் கோரியிருந்த நிலையில், அவர்களுக்கு உரிய கால அவகாசம் வழங்கப்பட்டு, அதன் பின்னர் அகற்றும் நடவடிக்கை தொடரப்பட்டது. இந்நடவடிக்கைக்கு பொலிஸார் மற்றும் விசேட அதிரடிப்படையினரும் பாதுகாப்பு ஒத்துழைப்பை வழங்கியிருந்தனர்.

இதற்கமைய, பொதுமக்களும் தாமாக முன்வந்து கரையோரப் பாதுகாப்புத் திணைக்கள அதிகாரிகளால் அடையாளப்படுத்தப்பட்ட எல்லைகளுக்குள் அமைந்திருந்த தமது கட்டுமானங்களை அகற்றி, அதிகாரிகளுக்கு ஒத்துழைப்பு வழங்கியிருந்தனர்.

இந்நிலையில், கருத்துத் தெரிவித்த அப்பகுதி மக்கள், தாம் சட்டத்திற்கு மதிப்பளித்து அரசாங்கத்தின் நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு வழங்குவதாகத் தெரிவித்தனர்.

அதேவேளை, குறித்த பகுதியில் மீன்பிடித் தொழிலில் ஈடுபடுபவர்களின் வாழ்வாதாரத் தேவைகளைக் கருத்திற்கொண்டு, தற்காலிக மீன்பிடிக் கொட்டில்கள் மற்றும் வேலிகள் அமைப்பதற்கு அனுமதி வழங்கப்பட வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.

மேலும், மூன்றுக்கும் மேற்பட்ட தலைமுறைகளாகத் தாம் இப்பகுதியில் வாழ்ந்து வருவதாகவும், சுனாமி வீட்டுத்திட்டத்தின் கீழ் தமக்குக் கிடைத்த வீடுகளில் ஒன்றைத் தமது பிள்ளைகளில் ஒருவருக்கு வழங்கியுள்ள நிலையில், ஏனைய பிள்ளைகளுடன் வசிப்பதற்கான மாற்றுக் காணிகளை அரசாங்கம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர்கள் வலியுறுத்தினர்.

சட்டத்திற்கு உட்பட்டு அரசாங்கத்தின் அபிவிருத்தி நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு வழங்கத் தயாராக இருப்பதாகத் தெரிவித்த பொதுமக்கள், அதேவேளை தமது வாழ்வாதாரம், குடியிருப்பு மற்றும் எதிர்காலத் தேவைகளையும் அரசாங்கம் கவனத்தில் கொள்ள வேண்டும் எனக் கோரிக்கை முன்வைத்தனர்.

 

Your Ad Here
Place your ads on our website

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
சனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்
AdvertisementSidebar Ad

தொடர்புடைய செய்திகள்

அறிவியல் & தொழில்நுட்பம்இலங்கை

செப்டம்பர் மாதம் டிஜிட்டல் பொருளாதார மாதமாக பிரகடனம்

ஆவணி 4, 2025
இலங்கைதிருக்கோணமலை

கந்தளாய் காட்டில் 4 ஏக்கர் கஞ்சா தோட்டம் கண்டுபிடிப்பு – சிறப்பு அதிரடிப்படையினரால் சுற்றி வளைப்பு

ஆடி 30, 2025
இலங்கைதிருக்கோணமலை

வட்டுக்கோட்டை பிரகடனத்தின் 50ஆம் ஆண்டு நிறைவை முன்னிட்டு எழுச்சி மாநாடு; பாடல் வெளியீட்டு விழாவும் ஏற்பாடு

ஆனி 6, 2026
இலங்கைதிருக்கோணமலை

திருகோணமலையில் ஹோட்டல் தீவிபத்து: சுற்றுலா பாதுகாப்பு கேள்விக்குறி

புரட்டாதி 6, 2025
Trinco MirrorTrinco Mirror
Follow US
© 2025 Trinco Mirror Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • நிகழ்வுகள்
  • ஆவணங்கள்
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?