Trinco Mirror
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • திருக்கோணமலை
    • உலகம்
    • ஆய்வுக் கட்டுரை
    • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • ஆவணங்கள்
  • அமைப்புகள்
Listen Live
Font ResizerAa
Trinco Mirror
Listen
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • திருக்கோணமலை
    • உலகம்
    • ஆய்வுக் கட்டுரை
    • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • ஆவணங்கள்
  • அமைப்புகள்
Follow US

வட்டுக்கோட்டை பிரகடனத்தின் 50ஆம் ஆண்டு நிறைவை முன்னிட்டு எழுச்சி மாநாடு; பாடல் வெளியீட்டு விழாவும் ஏற்பாடு

ஆனி 6, 2026
இலங்கை திருக்கோணமலை
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

தமிழர் அரசியல் வரலாற்றில் முக்கிய மைல்கல்லாகக் கருதப்படும் வட்டுக்கோட்டை பிரகடனத்தின் 50ஆம் ஆண்டு நிறைவை முன்னிட்டு, “வட்டுக்கோட்டை 50 எழுச்சி மாநாடு” எதிர்வரும் ஜூன் 20, 2026 அன்று யாழ்ப்பாணத்தில் உள்ள தந்தை செல்வா அரங்கில் நடைபெறவுள்ளது.

தமிழ்த் தேசிய அரசியல் சிந்தனைகள், வரலாற்றுப் பாரம்பரியம் மற்றும் எதிர்கால அரசியல் பயணத்தை மையப்படுத்தி ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இம்மாநாட்டில், பல்வேறு துறைகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் பங்கேற்கவுள்ளனர்.

இம்மாநாட்டை முன்னிட்டு உருவாக்கப்பட்டுள்ள சிறப்பு பாடலின் பாடல் வெளியீட்டு விழா, ஜூன் 7, 2026 ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 2.00 மணிக்கு, மட்டக்களப்பு அமெரிக்கன் மிஷன் மண்டபத்தில் நடைபெறவுள்ளது.

இந்த நிகழ்வில் தமிழ்த் தேசிய அரசியல்வாதிகள், சமூக செயற்பாட்டாளர்கள், பல்கலைக்கழக மாணவர்கள், சிவில் சமூக அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் தமிழ்த் தேசிய உணர்வாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிகழ்வுகளில் ஆர்வமுள்ள பொதுமக்கள் அனைவரும் பங்கேற்று ஆதரவு வழங்குமாறு ஏற்பாட்டாளர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.

“வரலாற்றை நினைவுகூர்ந்து, எதிர்காலத்தை உருவாக்குவோம்” என்ற செய்தியை முன்னிறுத்தி, வட்டுக்கோட்டை பிரகடனத்தின் அரை நூற்றாண்டு நினைவைப் பதிவு செய்யும் முக்கிய நிகழ்வாக இது அமையவுள்ளது.

Your Ad Here
Place your ads on our website

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்
AdvertisementSidebar Ad

தொடர்புடைய செய்திகள்

இலங்கைதிருக்கோணமலை

திருகோணமலை திரியாய் 05ம் வட்டாரத்தில் ஆணொருவனின் சடலம் மீட்பு!!

ஆவணி 9, 2025
இலங்கைதிருக்கோணமலை

ஸ்ரீ சண்முக இந்து மகளிர் கல்லூரி 3 பிரிவுகளில் மாவட்டத்தில் முதல் நிலை

சித்திரை 2, 2026
இலங்கைதிருக்கோணமலை

மன்னார் “கருநிலம்” போராட்டத்திற்கு ஆதரவாக திருகோணமலையில் கவனயீர்ப்பு

ஆவணி 6, 2025
இலங்கைதிருக்கோணமலை

செம்மணிக்கு நீதி கோரி நாளை திருகோணமலை சிவன் கோயிலடிக்கு முன் கவனயீர்ப்பு போராட்டம்!

ஆடி 25, 2025
Trinco MirrorTrinco Mirror
Follow US
© 2025 Trinco Mirror Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • நிகழ்வுகள்
  • ஆவணங்கள்
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?