லோகிதா தனுசன் அவர்களின் அனுபவப் பகிர்வில் உருவான “உன் மனதின் அற்புதம்” நூல் வெளியீட்டு விழா நாளை 15ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை 9.30 மணிக்கு திருகோணமலை ஸ்ரீ சண்முக இந்து மகளிர் கல்லூரி சம்பந்தர் மண்டபத்தில் நடைபெறவுள்ளது.
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி திரு. சீனித்தம்பி யோகேஸ்வரன் தலைமையில் நடைபெறவுள்ள இந்த விழாவிற்கு, திருகோணமலை துறைமுக அதிகார சபையின் அதிகாரி திரு. பரசுராமன் சிவநேசன் வரவேற்புரை நிகழ்த்துவார்.
இவ்விழாவில் முதன்மை விருந்தினராக கிழக்கு பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் பேராசிரியர் திரு. வைரமுத்து கனகசிங்கம் அவர்கள் கலந்து சிறப்பிக்கவுள்ளார். கௌரவ விருந்தினராக தி/ஸ்ரீ சண்முக இந்து மகளிர் கல்லூரியின் அதிபர் திருமதி தங்கமயிலாள் ஹரிகரன் பங்கேற்கவுள்ளார்.

சிறப்பு விருந்தினர்கள்:
மூத்த எழுத்தாளர் கலாநிதி திரு. கனகசபாபதி சரவணபவன், திருகோணமலை துறைமுக அதிகார சபையின் சிரேஷ்ட அதிகாரி திரு. தட்சணாமூர்த்தி ரமேஷ்குமார், கிழக்கிலங்கை தமிழ் விவாத மன்றத்தின் கௌரவ தலைவர் பொறியியலாளர் திரு. கிருபாகரன் ரிஷிகேஷன், உலகத்தமிழர் கலை மற்றும் பண்பாட்டுப் பேரவையின் (இலங்கை கிளை) தலைவர் திரு. சுந்தரம் சிவபாலன் மற்றும் அதன் செயலாளர் திரு. கந்தையா நேமிநாதன், பிரம்மகுமாரிகள் இராஜயோக நிலையத்தைச் சேர்ந்த திரு. கணபதிப்பிள்ளை ஹேமதாசன், ‘அன்பின் பாதை’ அமைப்பின் தலைவர் திரு. கனக. தீபகாந்தன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொள்ளவுள்ளனர்.
நிகழ்வின் நிறைவாக, சுவாமி விபுலானந்தர் நூற்றாண்டு விழா சபையின் செயலாளர் திரு. திருச்செல்வம் ரூபாகர் நன்றியுரை நிகழ்த்துவார்.
இலக்கிய ஆர்வலர்கள், மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் என அனைவரையும் இவ்விழாவில் கலந்து சிறப்பிக்குமாறு ஏற்பாட்டுக்குழுவினர் அன்புடன் அழைக்கின்றனர்.

