சிரேஷ்ட ஊடகவியலாளர் அ.அச்சுதன் எழுதிய ‘கோட்டைவாசலில் காலக்கண்ணாடி’ கட்டுரைத்தொகுப்பு நூல் வெளியீட்டு விழா இன்று சனிக் கிழமை பி.ப. 3.30 மணிக்கு திருகோணமலை மாநகரசபை பொது நூலக கேட்போர் கூடத்தில் ‘நீங்களும் எழுதலாம்’ கவிதைச் சிற்றிதழின் ஆசிரியர் எஸ்.ஆர்.தனபாலசிங்கம் தலைமையில் இடம்பெறும்.
இவ்விழாவில் முதன்மை அதிதியாக திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சண்முகம் குகதாசனும் சிறப்பு அதிதியாக திருகோணமலை மாநகராட்சி மன்றத்தின் முதல்வர் க.செல்வராஜா (சுப்ரா)வும், விசேட அதிதிகளாக ‘வீரகேசரி’ பத்திரிகையின் உதவி ஆசிரியர் கி.லஷ்மன் சிசில், கிளிவெட்டி பாரதிபுரம் பாரதி மகாவித்தியாலயத்தின் அதிபர் பு.ஜெயகாந்தனும் கலந்து சிறப்பிக்கின்றனர்.
நிகழ்வின் ஆரம்ப நிகழ்வாக தமிழ்த்தாய் வாழ்த்தை அ. கோகுல ரமணன் வழங்க, வரவேற்புரையை ஊடகவியலாளர் பா. விபூசி தனும், ஆசியுரையை திருகோணமலை பத்திரகாளி அம்பாள் தேவஸ்தான பிரதம குரு பிரம்மஸ்ரீ சோ. இரவிச்சந்திரக்குருக்களும், நூல் அறிமுக உரையை ஊடகவியலாளர் ச.திருச்செந்தூரனும், ஆய்வுரையை ஊடகவியலாளர் வடமலை ராஜ்குமாரும் வழங்க ஏற்புரையையும் நன்றியுரையையும் நூலாசிரியர் அரசரெத்தினம் அச்சுதன் நிகழ்த்துவார். இந்நிகழ்வை கலாபூஷணம் க.யோகானந்தம் தொகுத்து வழங்கவுள்ளார்.

