தமிழ் மக்களின் உரிமைக்காக 12 நாட்கள் உணவையும் நீரையும் ஒறுத்து உயிர்த் தியாகம் செய்த தியாகதீபம் திலீபனின் 38ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு திருகோணமலையில் நடைபெற்றது.
திருகோணமலை சிவன் ஆலயத்துக்கு அருகாமையில் தினமும் மாலை 5.15 மணிக்கு தியாக தீபத்தின் நினைவேந்தல் தொடர்ச்சியாக 12 நாட்களும் முன்னெடுக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

தாயக கனவுடன், ஐந்து அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து, உண்ணா நோன்பு நோற்று 12 நாட்கள் சொட்டு தண்ணீர் அருந்தாமல் தாயக கனவுடனேயே 1987 செப்டம்பர் 26 ஆம் திகதி முற்பகல் 10.48 மணிக்கு உயிர் நீத்தார்.
தியாக வரலாற்றை நினைவுறுத்தி ஒவ்வொரு வருடமும் தியாகதீபம் திலீபன் வாரத்தில் வடக்கு மற்றும் கிழக்கு தமிழர் தாயகம் உணர்வெழுச்சி கோலம் பூண்டு சிவப்பு மஞ்சள் வர்ண நினைவு அலங்காரங்களால் அலங்கரிக்கப்பட்டு நினைவேந்தல் நிகழ்வுகள் இடம்பெறுவது குறிப்பிடத்தக்கது.

