Trinco Mirror
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • திருக்கோணமலை
    • உலகம்
    • ஆய்வுக் கட்டுரை
    • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • ஆவணங்கள்
  • அமைப்புகள்
Listen Live
Font ResizerAa
Trinco Mirror
Listen
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • திருக்கோணமலை
    • உலகம்
    • ஆய்வுக் கட்டுரை
    • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • ஆவணங்கள்
  • அமைப்புகள்
Follow US

திருகோணமலை மாநகரசபைக்கு புது அதிகாரச் சின்னம்; பாரம்பரியத்தைப் பிரதிபலிக்கும் செங்கோல் அறிமுகம்

ஆவணி 31, 2025
இலங்கை திருக்கோணமலை
படிக்க 1 நிமிடங்கள்
SHARE
திருக்கோணமலை நகரசபை மாநகரசபையாக தரம் உயர்த்தப்பட்டுள்ள நிலையில் (28) மாநகரசபையின் செங்கோல் புதிதாக உருவாக்கப்பட்டு கொண்டுவரப்பட்டது.
திருகோணமலை மாநகரசபையின் மூன்றாவது சபை அமர்வு கௌரவ மாநகர முதல்வர் க.செல்வராஜா(சுப்ரா) அவர்களின் தலைமையில் (28.08.2025) நடைபெற்றது.
அமர்வின்போது சபைக்கு கொண்டுவரபட்ட செங்கோல் திருகோணமலையின் அடையாளமாக நந்தி உள்வாங்கப்பட்டு, அனைத்து மதங்களையும் பிரதிபலிக்கும் வகையில்
நான்கு மத தலங்களும் உள்ளடக்ப்பட்டு, திருக்குறளை முன்னிறுத்தி தமிழ் பாரம்பரிய கலை கலாச்சாரத்துடன் உருவாக்கப்பட்டு சபையில் முதல்வர் அவர்களால் சமர்ப்பிக்கப்பட்டது.
மாநகரத்தின் அதிகாரச் சின்னமாகத் திகழும் செங்கோல் கிட்டத்தட்ட 28 இறாத்தல் நிறையைக் கொண்டுள்ளதோடு 54 அங்குல நீளமுடையது. இச் செங்கோல், கருங்காலி மரம்,தேக்கு, மற்றும் வேம்பு,பித்தலை என்பவற்றினால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. மாநகரசபையினதும்,சபையின் ஊடாக முதல்வரின் அதிகாரச் சின்னமாகச் செங்கோல் விளங்கி வருவதால், செங்கோல் இன்றி மாநகரசபை அமர்வு இடம்பெற முடியாது. முதல்வர் சபாமண்டபத்திற்கு வருகை தரும் போதும், வெளியேறும் போதும், அவருக்கு முன்னே, ஆராட்ச்சி செங்கோலை ஏந்தியபடி செல்ல, அவரைத் தொடர்ந்து சபையின் செயலாளர் செல்வார்.
சபை அமர்வு நடைபெற்றுக் கொண்டிருக்கும்போது சபையின் மேசைக்குக் கீழே, அதற்கென அமைக்கப்பட்டுள்ள தாங்கியில் ஆராட்ச்சி அவர்களால் வைக்கப்பட்ட செங்கோல் காணப்படும்.
Your Ad Here
Place your ads on our website

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
சனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்
AdvertisementSidebar Ad 2

தொடர்புடைய செய்திகள்

இலங்கை

அதிகரித்துச் செல்லும் பாடசாலை இடைவிலகல் – அதிர்ச்சித் தகவல்

ஆடி 29, 2025
இலங்கைதிருக்கோணமலை

திருகோணமலை மாவட்டச் செயலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம்

ஆடி 29, 2025
இலங்கைதிருக்கோணமலை

கிழக்கு மாகாண மக்களின் பிரச்சினைகள் குறித்து சுவிச்சர்லாந்து இராஜதந்திரிகளுடன் AHRC கலந்துரையாடல்

ஆனி 12, 2026
இலங்கைதிருக்கோணமலை

திருகோணமலை கடற்கரை சர்ச்சைக்குரிய கட்டுமானம் மற்றும் புத்தர் சிலை விவகாரம்: வழக்கு இன்று விசாரணை

ஆனி 17, 2026
Trinco MirrorTrinco Mirror
Follow US
© 2025 Trinco Mirror Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • நிகழ்வுகள்
  • ஆவணங்கள்
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?