கரையோரம் பேணல் மற்றும் கரையோர மூலவள முகாமைத்துவத் திணைக்களத்தின் ஏற்பாட்டில் திருக்கோணமலை உப்புவெளி கடற்கரை பொழுதுபோக்கு பூங்கா அமைப்பதற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு இன்று காலை 10:30 மணி அளவில் இடம்பெற்றது.
இதன் போது பிரதி அமைச்சர் அருண் ஹமச்சந்திரா, தேசிய மக்கள் சக்தியின் திருக்கோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ரோஷன் அக்கிமன, மற்றும் முக்கிய அரச அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
விருந்தினர்கள் வரவேற்று அழைக்கப்பட்டு அடிக்கல் நாட்டும் நிகழ்வு இடம்பெற்றது. 1.7 மில்லியன் செலவில் முதற்கட்டமாக 100m தூரமான கடற்கரை பாதை, அமர்விடம், மரங்கள் நாட்டப்பட உள்ளமை குறிப்பிடத்தக்கது.