Trinco Mirror
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • திருக்கோணமலை
    • உலகம்
    • ஆய்வுக் கட்டுரை
    • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • ஆவணங்கள்
  • அமைப்புகள்
Listen Live
Font ResizerAa
Trinco Mirror
Listen
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • திருக்கோணமலை
    • உலகம்
    • ஆய்வுக் கட்டுரை
    • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • ஆவணங்கள்
  • அமைப்புகள்
Follow US

இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் ஆணையாளர்கள் செம்மணிக்கு வருகை

ஆவணி 4, 2025
இலங்கை
படிக்க 1 நிமிடங்கள்
SHARE
இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் ஆணையாளர்களான பேராசிரியர் தையமுத்து தனராஜ், பேராசிரியர் பாத்திமா பர்சானா ஹனிபா மற்றும் கலாநிதி கெஹான் தினுக் குணதிலக்க ஆகியோர் இன்று செம்மணி மனிதப் புதைகுழிக்கு விஜயம் செய்து நடைபெற்று வரும் அகழ்வாராய்ச்சியை அவதானித்துள்ளனர்.
அவர்களுடன் யாழ்.பிராந்திய அலுவலகத்தின் இணைப்பாளர் தங்கவேல் கனகராஜ் மற்றும் ஆணைக்குழுவின் ஏனைய அதிகாரிகளும் இணைந்துகொண்டனர். அவர்கள் புதைகுழி இடத்தின் கண்டுபிடிப்புகள் மற்றும் முன்னேற்றம் குறித்து தடயவியல் நிபுணர்களுடன் கலந்துரையாடலில் ஈடுபட்டனர்.
யாழ்ப்பாணம் செம்மணி பகுதியில் மேற்கொள்ளப்படும் மனிதப் புதைகுழி கட்டம் இரண்டின் அகழ்வுப் பணிகள் இன்று 30வது நாளை எட்டியது . இன்றைய தினத்தில் மேலும் ஐந்து மனித எலும்புக்கூடுகள் கண்டறியப்பட்டுள்ளன. இதன் மூலம் இதுவரை மொத்தமாக 135 எலும்புக்கூட்டுகள் கண்டறியப்பட்டுள்ளன. இதில் 126 எலும்புக்கூடுகள் முழுமையாக அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளன.
இதனிடையே, அகழ்வின்போது மீட்க்கப்பட்ட உடைகள் மற்றும் பிற பொருட்கள், நாளை (ஆகஸ்ட் 5) செம்மணியில் உள்ள சித்துப்பாத்தி இந்து மயானத்தில் பொதுமக்கள் மற்றும் காணாமல் போனவர்கள் குடும்பத்தினருக்காக காட்சிப்படுத்தப்படும். இது, நீதிமன்ற விசாரணையின் ஒரு பகுதியாகும்.
Your Ad Here
Place your ads on our website

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்
AdvertisementSidebar Ad 2

தொடர்புடைய செய்திகள்

இலங்கை

புதிய கல்வி சீர்திருத்தங்களை செயல்படுத்தும் நோக்கில் ஆசிரியர்களுக்கான பயிற்சி ஆரம்பம்

ஆவணி 18, 2025
இலங்கைதிருக்கோணமலை

திருகோணமலையில் ASP சித்திரக் கலைக்கூட மாணவர்கள் வெளிப்புற சித்திரப் பயிற்சியில் ஈடுபாடு

பங்குனி 3, 2026
இலங்கைதிருக்கோணமலை

கிளீன் ஸ்ரீலங்கா திட்டத்தின் கீழ் திருக்கோணமலை கடற்கரையில் சிரமதானம்

ஆடி 29, 2025
இலங்கைதிருக்கோணமலை

டித்வா சூறாவளியால் பாதிக்கப்பட்ட கந்தளாய் மக்களுக்கு AHRC நிறுவனத்தின் வாழ்வாதார உதவிகள்

ஆனி 12, 2026
Trinco MirrorTrinco Mirror
Follow US
© 2025 Trinco Mirror Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • நிகழ்வுகள்
  • ஆவணங்கள்
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?