கிழக்கு மாகாண ஆளுநர் பேராசிரியர் ஜயந்த லால் ரத்ன சேகர அவர்களின் தலைமையில் 22 ஆம் படைப்பிரிவின் ஏற்பாட்டில் இன்றைய தினம் கிளீன் ஸ்ரீலங்கா திட்டத்தின் கீழ் திருக்கோணமலை பிரதான கடற்கரை சிரமதானம் செய்யப்பட்டது.
காலை ஏழு முப்பது மணி அளவில் ஆரம்பமான இந்நிகழ்வில், கிழக்கு மாகாண ஆளுநர், கிழக்கு மாகாண பிரதம செயலாளர், திருக்கோணமலை பட்டினமும் சூழலும் பிரதேச செயலாளர், கரையோர பாதுகாப்புத் திணைக்கள உத்தியோகத்தர்கள், கிராம சேவகர்கள், ராணுவ அதிகாரிகள், போலீசார் என பலர் கலந்து கொண்டனர்.
ஆரம்ப நிகழ்வின் பின்னர், திருக்கோணமலை பிரதான கடற்கரை சுத்தம் செய்யப்பட்டது.