“அன்பின்பாதை எண்ணம்போல் வாழ்க்கை கலை இலக்கிய மன்றம்” பெருமையுடன் நடாத்திய “பெண்மையைப் போற்றுவோம் -2025 நிகழ்வானது 26.07.2025 சனிக்கிழமை காலை 10:45 – 12:45 வரை திருகோணமலை மாநகரசபை கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் இருபத்து மூன்று பெண்கள் கௌரவிக்கப்பட்டனர்.
அன்பின்பாதை எண்ணம்போல்வாழ்க்கை கலை இலக்கிய மன்றத்தின் தலைவர் கனக.தீபகாந்தன் தலைமையில் நிகழ்வு ஆரம்பமானது.
முதன்மை விருந்தினராக திருகோணமலை மாநகரசபையின் முதலாவது மேயரான கௌரவ க.செல்வராசா அவர்கள் கலந்து சிறப்பித்தார்.
சிறப்பு விருந்தினர்களாக திருகோணமலை மறைமாவட்ட ஆயர் பேரருட்திரு. நோயல் இம்மானுவேல்,
திருகோணமலை தென்கையிலை ஆதீனம் குருமகா சந்னிதானம் தவத்திரு அகஸ்திய அடிகளார்,
ஸ்ரீசண்முக இல்ல பொறுப்பாளர் செல்வி.விமலா நடராஜா,
திருகோணமலை பிராந்திய கல்வித் திணைக்களத்தின் பிரதிக் கல்விப் பணிப்பாளர் திருமதி.சுபாங்கி ஜோன்சன் ஆகியோர் கலந்து சிறப்பித்திருந்தனர்.
இந்நிகழ்வில் “மாதர்குலம் மனுக்குலத்தின் மணிமகுடம்” எனும் தலைப்பில் கிழக்கு மாகாண ஆளணி மற்றும் பயிற்சி, பிரதிப் பிரதம செயலாளர் திரு நா.மணிவண்ணன் சிறப்புரையாற்றினார்.
நிகழ்வில் சிறுமிகளின் கண்கவர் நடனங்கள் மற்றும், பாடல்களும் இடம்பெற்றமை சிறப்பம்சமாகும்.
