செம்மணி விவகாரத்திற்கு சர்வதேச சுயாதீன விசாரணை பொறிமுறையைக் கோரும் வடக்கு-கிழக்கு மாகாண தமிழ் மக்களின் போராட்டத்திற்கு ஆதரவாக நாளை காலை 10 மணிக்கு கொழும்பிலுள்ள ஐக்கிய நாடுகள் சபை வளாகத்தின் முன்பு ‘மான்புமிகு மலையக மக்கள் சிவில் கூட்டிணைவு’ ஆதரவுடன் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்படவுள்ளது.
மேலும், தமிழ் மக்கள் மீது திட்டமிடப்பட்ட வகையில் நடாத்தப்பட்டு வரும் இன அழிப்பிற்கு சர்வதேச நீதி கோரி முன்னெடுக்கப்படும் இந்த போராட்டமானது வடக்கு கிழக்கின் 8 மாவட்டங்களிலும் முன்னெடுக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நீண்ட காலமாக தமிழ் மக்கள் மீது திட்டமிடப் பட்ட வகையில் நடாத்தப்பட்டு வரும் இன அழிப்பிற்கு சர்வதேச நீதி கோரிய போராட்ட மானது வடக்கு கிழக்கு சமூக இயக்கத்தின் ஏற்பாட்டில் வடக்கு கிழக்கு எட்டு மாவட்டங்களிலும் எதிர்வரும் 26.07.2025 சனிக்கிழமை- நாளை காலை 10.00 மணிக்கு (ஒரே நேரத்தில் எட்டு மாவட்டங்களிலும்) நடாத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.
அதனடிப்படையில்
1. மட்டக்களப்பு காந்தி பூங்கா.
2. அம்பாறை திருக்கோயில்.
3. திருகோணமலை சிவன் கோயிலடி.
4. முல்லைத் தீவில் மாவட்ட செயலகம் அருகில்.
5. கிளிநொச்சி கந்தசாமி கோயில்.
6. மன்னார் நகரப்பகுதி.
7. வவுனியா புதிய பேரூந்து நிலையம்.
8. யாழ்ப்பாணம் செம்மணியிலும்
9. கொழுப்பு- UN RC அலுவலகத்திற்கு முன்னால் நடைபெற உள்ளது.