திருகோணமலையில் (Trincomalee) யானை தாக்கி நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.சம்பவத்தில் ஜீ.எம்.ரஞ்சித் (53வயது) ஹெல்லென-மித்தெனிய பகுதியைச் சேர்ந்த ஒருவரே உயிரிழந்துள்ளார்.குறித்த சம்பவம் நேற்று (25) மொரவெவ காவல் பிரிவுக்குட்பட்ட கந்தளாய் காட்டுப்பகுதியில் இடம்பெற்றுள்ளது.
கந்தளாய் காட்டுப் பகுதிக்கு தேன் எடுப்பதற்காக மூன்று பேர் சென்ற நிலையில், அங்கு யானை குறித்த நபர்களை தாக்க முற்பட்டுள்ளது.இதையடுத்து, மூவரும் வெவ்வேறாக பிரிந்து சென்ற நியைலில், அதில் ஒருவரை யானை தாக்கியதாக ஆரம்ப கட்ட விசாரணையின் மூலம் தெரிய வந்துள்ளது.
மொரவெவ காவல்துறையினர் மற்றும் வன ஜீவராசிகள் திணைக்கள உத்தியோகத்தர்கள் இணைந்து குறித்த காட்டுப் பகுதிக்கு சென்று சடலத்தை கொண்டு வந்துள்ளனர்.சடலம் பிரேத பரிசோதனைக்காக திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
குறித்த சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக மொரவெவ காவல்துறையினர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.