Trinco Mirror
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • திருக்கோணமலை
    • உலகம்
    • ஆய்வுக் கட்டுரை
    • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • ஆவணங்கள்
  • அமைப்புகள்
Listen Live
Font ResizerAa
Trinco Mirror
Listen
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • திருக்கோணமலை
    • உலகம்
    • ஆய்வுக் கட்டுரை
    • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • ஆவணங்கள்
  • அமைப்புகள்
Follow US

ஜெர்மனி தூதுவருடன் அகம் மனிதாபிமான வள நிலையம் அமைப்பின் பணிப்பாளர்கள் கலந்துரையாடல்

ஆனி 2, 2026
இலங்கை திருக்கோணமலை
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

திருகோணமலை மாவட்டத்திற்கு விஜயம் செய்திருக்கும் ஜெர்மனி நாட்டின் இலங்கைக்கான தூதுவர் Dr. Felix Neumann அவர்கள் இன்றைய தினம் (02.06.2026) திருகோணமலையில் உள்ள தனியார் விடுதியில் வைத்து எமது அகம் மனிதாபிமான வள நிலையம் அமைப்பின் பணிப்பாளர்களை சந்தித்தார்.


இச் சந்திப்பின் போது வடக்கு கிழக்கு மாகாணங்களில் இடம்பெறும் காணி தொடர்பான பிரச்சினைகள், மனித உரிமை விடயங்கள் மற்றும் மனித உரிமை செயற்ப்பாட்டாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பாகவும் மிக ஆழமாக கலந்துரையாடப்பட்டிருந்தது.

இறுதியாக வடக்கு கிழக்கு தமிழ் மக்கள் எதிபார்க்கும் அரசியல் தீர்வுகள் தொடர்பாக கலந்துரையாடப் பட்டதுடன்,
குறிப்பாக
1. பாதிக்கப்பட்ட மக்களின் பிரச்சினைகளுக்கான நீதிக்காக சர்வதேச சுயாதீன விசாரணை பொறிமுறை வேண்டும்,
2. வடக்கு கிழக்குப் பிறதேசங்களில் அரச கட்டமைப்புப் பொறி முறைகளால் அபகரிக்கப்பட்ட காணிகள் உடன் விடுவிக்கப்படல் வேண்டும்.
3. பயங்கரவாத தடைச் சட்டம் நீக்கப்படல் வேண்டும்,
4. வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்கு மேற்படி சர்வதேச நீதிப்பொறி முறை ஊடான நீதி வழங்கப்பட வேண்டும்,
5. செம்மணி போன்ற கூட்டுப் புதை குழிகள் சர்வதேச வல்லுநர்களின் தொழில்நுட்ப மேற்பார்வையின் கீழ் விசாரிக்கப் பட வேண்டும்.
6. சிங்கள காலனித்துவம், இராணுவமயமாக்கல் மற்றும் தமிழர்களின் கலாச்சாரத்தினை அழிக்கும் வேறு எந்த வடிவங்களும் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் ஆகிய வேண்டுகோள்களை உள்ளடக்கிய மகஜர் ஒன்றும் வடக்கு கிழக்கு சமூக இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திரு. கண்டுமணி லவகுசராசா அவர்களினால் தூதுவரிடம் வழங்கியும் வைக்கப்பட்டது

Your Ad Here
Place your ads on our website

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளி
AdvertisementSidebar Ad

தொடர்புடைய செய்திகள்

இலங்கைதிருக்கோணமலை

தி/இ.கி.ச ஸ்ரீ கோணேஸ்வர இந்துக்கல்லூரி பழைய மாணவர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவித்தல்

ஆவணி 20, 2025
இலங்கைஉலகம்

இலங்கை குடிமக்களுக்கு 90 நாள் இலவச வருகை விசா

ஆடி 31, 2025
இலங்கைதிருக்கோணமலை

இலஞ்சம் வாங்கிய திருகோணமலை குச்சவெளி பிரதேச தவிசாளர் கைது

கார்த்திகை 1, 2025
இலங்கைதிருக்கோணமலை

கந்தளாய் காட்டில் 4 ஏக்கர் கஞ்சா தோட்டம் கண்டுபிடிப்பு – சிறப்பு அதிரடிப்படையினரால் சுற்றி வளைப்பு

ஆடி 30, 2025
Trinco MirrorTrinco Mirror
Follow US
© 2025 Trinco Mirror Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • நிகழ்வுகள்
  • ஆவணங்கள்
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?