“மரணத்தை தாண்டியும் தொடரும் நீதிக்கான பயணம்…”
2006 ஆம் ஆண்டு ஜனவரி 2ம் திகதி திருக்கோணமலை கடற்கரையில் இடம்பெற்ற வன்முறைச் சம்பவத்தில் படுகொலை செய்யப்பட்ட ஐந்து பல்கலைக்கழக மாணவர்களுக்கு நீதி கோரி, தன்னுடைய இறுதி மூச்சுவரை போராடிய மருத்துவர் மனோகரனின் நினைவு நிகழ்வு இந்த மாதம் நடைபெற உள்ளது.
திருக்கோணமலை கடற்கரையில் நடைபெறும் இந்த நினைவு கூட்டத்திற்கு சமூக ஆர்வலர்கள், மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் வரவேற்கப்படுகிறார்கள்.
நிகழ்வின் விவரங்கள்:
தலைப்பு: மரணத்தை தாண்டியும் தொடரும் நீதிக்கான பயணம்… ஐந்து மாணவர்களின் நீதிக்காக போராடிய மருத்துவர் மனோகரனின் நினைவு
- நாள்: செப்டம்பர் 27, சனிக்கிழமை
- நேரம்: மாலை 6.00 மணி
- இடம்: திருகோணமலை கடற்கரை (2006ல் சம்பவம் நடந்த இடம்)

2006 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 2 ஆம் திகதி, லோகிதராசா ரொகான், சண்முகராஜா சஜீந்திரன், மனோகரன் வசீகர், தங்கத்துரை சிவானந்தன், யோகராஜா கேமச்சந்திரன் ஆகிய மாணவர்கள் மிலேச்சத்தனமாக படுகொலை செய்யப்பட்டிருந்தனர்.
இவர்களில் ரஜீகர் மனோகரன் என்ற மாணவனின் படுகொலைக்கு நீதி கோரிப் போராடி வந்த, அவரின் தந்தையான வைத்தியர் காசிப்பிள்ளை மனோகரன் (வயது 84) என்பவரே, எவ்வித நீதியும் கிடைக்காமல் கடந்த ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்துள்ளார்.
அரச பயங்கரவாதத்தில் கொல்லப்பட்ட ரஜீகர் மனோகரனின் பிறந்தநாள் கடந்த ஞாயிற்றுக்கிழமையாகும்.மகனின் பிறந்த தினத்திலேயே, அவருக்கு நீதி கோரி வந்த தந்தை காலமாகியுள்ளார்.

