உள்ளூராட்சி வாரத்தினை முன்னிட்டு பலதரப்பட்ட நிகழ்வுகள் மற்றும் போட்டிகள் கௌரவ மாநகர முதல்வர் க.செல்வராஜா(சுப்ரா) அவர்களின் தலைமையில் மாநகர ஆணையாளர் உ.சிவராசா அவர்களின் வழிப்படுத்தலில் மாநகரசபையினால் ஏற்பாடு செய்யப்பட்டு நடைபெற்றது.
குறித்த நிகழ்வின் இறுதிநாள் நிகழ்வாக மாநகர சபை உத்தியோகத்தர்கள் மற்றும் ஊழியர்களுக்கிடையிலான விளையாட்டுப்போட்டிகள் மற்றும் பரிசளிப்பு நிகழ்வும் மாநகர ஆணையாளர் உ.சிவராசா அவர்களின் தலைமையில் (20) நடைபெற்றது.
இன் நிகழ்விற்கு பிரதம விருந்தினராக கௌரவ முதல்வர்க.செல்வாராஜா(சுப்ரா),கௌரவ விருந்தினராக கௌரவ பிரதி முதல்வர் எம்.என். மௌசூம் மற்றும் சிறப்பு விருந்தினர்களாக கௌரவ உறுப்பினர்கள் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.

நிகழ்வில் பங்குபற்றிய பாடசாலை மாணவர்கள்,மாநகர சபையின் செயலாளர், உத்தியோகத்தர்கள்,வேலைத்தல ஊழியர்கள், சுகாதார பகுதி ஊழியர்கள்,ஆயுள்வேத வைத்தியசாலை ஊழியர்கள் மற்றும் தீயணைப்பு பிரிவினர்கள் என அனைவரும் கலந்துகொண்டமை குறிப்பிடதக்கது.

