Trinco Mirror
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • திருக்கோணமலை
    • உலகம்
    • ஆய்வுக் கட்டுரை
    • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • ஆவணங்கள்
  • அமைப்புகள்
Listen Live
Font ResizerAa
Trinco Mirror
Listen
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • திருக்கோணமலை
    • உலகம்
    • ஆய்வுக் கட்டுரை
    • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • ஆவணங்கள்
  • அமைப்புகள்
Follow US

மூதூர்-மணற்சேனையில் சர்வதேச நீதிகோரி கையெழுத்துப் போராட்டம்

புரட்டாதி 7, 2025
இலங்கை திருக்கோணமலை
படிக்க 1 நிமிடங்கள்
SHARE
செம்மணி உட்பட இலங்கையில் வடக்கு கிழக்கு மண்ணில் உள்ள மனித புதைகுழிகளுக்கானதும் ,நடைபெற்ற இனப்படுகொலைக்குமான சர்வதேச நீதி கோரிய கையெழுத்து போராட்டம் நேற்று சனிக்கிழமை (06) மூதூர் -மணற்சேனை பகுதியில் முன்னெடுக்கப்பட்டது.
தமிழ் தேசிய கட்சிகள் மற்றும் பொது அமைப்புகள் ஒன்றிணைந்து கையெழுத்து போராட்டத்தை ஏற்பாடு செய்துள்ளன.இதில் அதிகளவான பொதுமக்கள் கலந்து கொண்டு கையெழுத்துக்களை இட்டதையும் காண முடிந்தது.
கையெழுத்து போராட்டத்தில் ஈடுபட்ட மூதூர் பிரதேச சபையின் உறுப்பினர் அ.உதயகுமார் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தார்.
இதன்போது கருத்து தெரிவிக்கையில் –
வடகிழக்கிலே இடம்பெற்ற இனப்படுகொலைக்கு நீதி கோரி கையெழுத்து போராட்டத்தை சகல தமிழ் கட்சிகளும் இணைந்து ஆரம்பித்திருக்கிறோம்.
இலங்கையில் இருக்கின்ற 17 புதைகுழிகளில் மூதூர் -மணற்சேனையும் ஒன்றாகும்.கிட்டத்தட்ட 47 உடலங்கள் இங்கு புதைக்கப்பட்டுள்ளன.இந்த மயானமும் சர்வதேசத்திற்கு சாட்சி சொல்ல கூடிய ஒன்றாகும்.
வடகிழக்கிலே இடம்பெற்ற இனப்படுகொலைக்கு ஐ.நா சபையினுடைய நீதியை கோரி நிற்கின்றோம்.எங்களால் எடுக்கப்படுகின்ற கையெழுத்துக்களை ஐ.நா வின் மனித உரிமை ஆணைக் குழுவுக்கு அனுப்பவுள்ளோம்.
காணாமல் ஆக்கப்பட்டதற்கும் இனப்படுகொலைக்கும் உள்ளக பொறி முறையில் நீதி கிடைக்காது என்ற வகையில் நாம் சர்வதேசத்தை வேண்டி நிற்கின்றோம் எனவும் தெரிவித்தார்.
Your Ad Here
Place your ads on our website

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
வியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனி
AdvertisementSidebar Ad 2

தொடர்புடைய செய்திகள்

இலங்கை

காணாமலாக்கப்பட்டவர்கள் தினத்தை முன்னிட்டு திட்டமிடப்பட்டுள்ள பாரிய போராட்டம்

ஆவணி 7, 2025
இலங்கை

உயர்தரப் பரீட்சையில் சிறந்த பெறுபேறுகளைப் பெற்ற மாணவர்கள் ஜனாதிபதி நிதியத்தினால் கௌரவிப்பு

ஆடி 28, 2025
இலங்கைதிருக்கோணமலை

திருகோணமலையில் யானைத் தாக்குதல்: வயதானவர் உயிரிழப்பு!

ஆவணி 31, 2025
இலங்கைதிருக்கோணமலை

அனோஜனின் விடுதலையை வலியுறுத்தி திருகோணமலையில் மெழுகுவர்த்தி ஏந்திய மனிதாபிமான ஒற்றுமை நிகழ்வு

புரட்டாதி 21, 2026
Trinco MirrorTrinco Mirror
Follow US
© 2025 Trinco Mirror Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • நிகழ்வுகள்
  • ஆவணங்கள்
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?