திருகோணமலை, அலஸ்தோட்டம் பிரதேசத்தில் அமைந்துள்ள ஒரு ஹோட்டல் சற்று முன்னர் தீவிபத்திற்கு உள்ளாகியுள்ளது.
சமீப காலமாக அப்பகுதிக்கு வெளிநாட்டு சுற்றுலா பயணிகளின் வருகை கணிசமாக அதிகரித்துள்ள நிலையில், சுற்றுலா பிரயாணிகளின் வருகையைக் குறைப்பதற்கான நோக்கில் இத்தகைய சம்பவங்கள் வேண்டுமென்றே திட்டமிடப்படுகிறதா என்பது குறித்து விரிவான விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும் என உள்ளூர் மக்களும் ஆர்வலர்களும் வலியுறுத்துகின்றனர்.
மேலும், பிரதேசத்தில் அமைக்கப்பட்டுள்ள விடுதிகள் மற்றும் ஹோட்டல்கள் போதுமான பாதுகாப்பு நடைமுறைகளைப் பின்பற்றி அமைக்கப்பட்டுள்ளதா, அல்லது சட்டரீதியான அனுமதியின்றியே இவை நிர்மாணிக்கப்பட்டுள்ளனவா என்பது குறையும் கடுமையான கேள்விகளை இந்த சம்பவம் எழுப்பியுள்ளது.
இச்சம்பவத்திற்கான காரணம் மற்றும் ஹோட்டலின் நிர்வாக அனுமதி நிலை குறித்து விசாரணை நடத்தி, தேவையான நடவடிக்கைகள் எடுக்கும் படி தொடர்புடைய அதிகாரிகளுக்கு அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.