தி/இ.கி.ச ஸ்ரீ கோணேஸ்வர இந்துக்கல்லூரியின் பழைய மாணவர் சங்கத்தின் வருடாந்திர பொதுக்கூட்டம் நேற்று(24) பெரும் எதிர்பார்ப்புகளின் மத்தியில் கல்லூரி மண்டபத்தில் நடைபெற்றது.
கூட்டத்தின் முக்கிய நிகழ்வான, 2025/2026 ஆம் ஆண்டிற்கான புதிய நிர்வாக சபைத் தேர்தல் நடைபெற்று, புதிய பொறுப்பாளர்கள் தெரிவு செய்யப்பட்டனர்.
ஒருமனதாக தேர்வு
பொதுக்கூட்டத்தில் பங்குபெற்ற சங்க உறுப்பினர்களின் ஒருமித்த முடிவின் பேரில், புதிய நிர்வாக சபை பின்வருமாறு அமைக்கப்பட்டது.
- தலைவர்: திரு. எஸ். கணேஷலிங்கம் (கல்லூரி அதிபர் – பதவி வழி)
- செயலாளர்: திரு. க. துஷியந்தன் (1996 A/L பழைய மாணவர்)
- பொருளாளர்: திரு. சபேஷ்குமார் (1996 A/L பழைய மாணவர்)
- உப தலைவர்: திரு. பிரகாஷ், திரு. இ. அசோக்
- உப செயலாளர்: திரு. கலைச்செல்வன்
- உப பொருளாளர்: திரு. கை. ரதன்
மேலும், 12 பேர் நிர்வாக சபை உறுப்பினர்களாகத் தெரிவுசெய்யப்பட்டனர்.
செயலாளரின் உறுதிமொழி
புதிதாக செயலாளராகத் தெரிவுசெய்யப்பட்ட திரு. க. துஷியந்தன் தனது நன்றி உரையில், புதிய நிர்வாகம் சங்கத்தின் முன்னேற்றத்திற்காக அனைத்து உறுப்பினர்களின் ஒத்துழைப்புடன் சிறப்பாகப் பணியாற்றும் என்று உறுதியளித்தார்.
குறிப்பாக, நிர்வாகக் கூட்டங்களுக்கு தொடர்ந்து வருகை தராத உறுப்பினர்கள் குறித்து சங்க விதிமுறைகளுக்கு அமைவாக கடுமையான நடவடிக்கைகள் இக்காலகட்டத்தில் மேற்கொள்ளப்படும் என்றும் அவர் தெரிவித்தார். புதிய நிர்வாகம், பொதுச்சபையின் முழுமையான ஒத்துழைப்போடு செயல்படும் என்பதையும் வலியுறுத்தினார்.
கல்லூரி மற்றும் அதன் மாணவர்களின் நலன் கருதி பல்வேறு மேம்பாட்டுத் திட்டங்களை அமுல்படுத்தவுள்ளதாகவும் புதிய நிர்வாகம் உறுதிபூண்டுள்ளது.