இவ்வருடம் அம்பாறையில் நடைபெற்ற கிழக்கு மாகாண வலைப்பந்தாட்ட போட்டியில் முதலிடம் பெற்று, பாடசாலைக்கும் தம்பலகாமத்துக்கும் திருகோணமலை மண்ணுக்கும் பெருமை சேர்த்த திருகோணமலை குளக்கோட்டன் தமிழ் வித்தியாலய வலைப்பந்தாட்ட வீராங்கனைகள் மற்றும் உடற்கல்வி ஆசிரியர் / விளையாட்டு பயிற்றுவிப்பாளர் ஆகியோர் நேற்று பிரதேச மக்களால் சிறப்பாக வரவேற்கப்பட்டனர்.
பாடசாலை அபிவிருத்தி சங்க உறுப்பினர்கள், பழைய மாணவர் சங்க உறுப்பினர்கள், தம்பலகாமம் ஆதி கோணநாயகர் தேவஸ்தான நம்பிக்கை பொறுப்பாளர் சபையினர், பாடசாலை ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள், கிராமவாசிகள் மற்றும் நலன்விரும்பிகள் அனைவரும் ஒன்றிணைந்து சாதனையாளர்களை பாராட்டி வாழ்த்தினார்கள்.