2025 ஆகஸ்ட் மாதம் 7, 8, 9 ஆகிய தேதிகளில் நடைபெற்ற தேசிய மட்ட கணித ஒலிம்பியாட் போட்டி – பிரிவு 1 (தரம் 6) இல் பங்கேற்று, இரண்டாம் இடத்தை வென்ற தி/தி/இ.கி.ச. ஸ்ரீ கோணேஸ்வரா இந்துக் கல்லூரி மாணவன் செல்வன் எஸ். அஸ்வந்த், சர்வதேச மட்ட போட்டியில் பங்கேற்க தகுதி பெற்றுள்ளார்.
இச்சிறப்பான சாதனைக்கு வழிகாட்டிய பாடசாலை அதிபர், கணிதப் பிரிவு ஆசிரியர்கள் மற்றும் தொடர்புடைய அனைவருக்கும் நன்றியையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கின்றோம்.
கல்வி துறையில் திருக்கோணமலையின் சிறப்பை தேசிய மட்டத்திலும், விரைவில் சர்வதேச மட்டத்திலும் உயர்த்த உள்ள செல்வன் எஸ். அஸ்வந்த் அவர்களுக்கு எங்கள் மனமார்ந்த வாழ்த்துகள்.