மூதூர் தி/மூ/பள்ளிக்குடியிருப்பு கலைமகள் இந்துக் கல்லூரி மாணவிகள், மாகாண மட்ட வலைப்பந்தாட்டப் போட்டிகளில் அனைத்து பிரிவுகளிலும் சிறப்பான வெற்றிகளைப் பதிவு செய்து, பள்ளிக்குப் பெருமை சேர்த்துள்ளனர்.
இந்தச் சாதனையை ஏற்படுத்திய மாணவிகளுக்கும், அவர்களின் பயிற்றுவிப்பாளருக்கும், பொறுப்பாசிரியருக்கும், அதிபருக்கும், மேலும் பாடசாலை சமூகத்திற்கும் Trinco Mirror சார்பாக மனமார்ந்த வாழ்த்துகள்.
பெற்ற நிலைகள்:
16 வயது பிரிவு – 3ஆம் இடம்
18 வயது பிரிவு – 2ஆம் இடம்
20 வயது பிரிவு – 2ஆம் இடம்
இவ்வெற்றி, மாணவிகளின் அர்ப்பணிப்பு, கடுமையான உழைப்பு மற்றும் பாடசாலையின் விளையாட்டு துறைக்கான உறுதிப்பாட்டின் சான்றாகவும், மாகாண மட்டத்தில் பாடசாலையின் மதிப்பை உயர்த்திய ஒரு மைல்கல் வெற்றியாகவும் அமைந்துள்ளது.