திருக்கோணமலை பிரதான கடற்கரை மற்றும் கரையோரங்களை அண்டிய பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள சட்ட விரோத கட்டிடங்கள் மற்றும் சிற்றுண்டி சாலைகள் போன்றவற்றுக்கு இன்றைய தினம் கரையோர பாதுகாப்பு திணைக்களத்தினால் குறித்த கட்டிடங்களை அகற்றக்கோரி உத்தரவுகள் காட்சிப்படுத்தப்பட்டது.
குறித்த திணைக்கள ஊழியர்கள் வருகை தந்ததுடன் அறிவித்தல்களை ஒட்டினர்.
குறித்த கட்டிடங்கள் தொடர்பில் தற்போதைய திருக்கோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான அருண் ஹேமசந்திரா மற்றும் ரோஷான் அக்கிமன ஆகியோர் முன்னைய அரசாங்கத்தின் காலங்களில் கடும் எதிர்ப்பை தெரிவித்து வந்த நிலையிலும் எந்த ஒரு சட்ட நடவடிக்கையும் எடுக்கப்படாமல் இருந்தது.
எனினும் தற்சமயம் தேசிய மக்கள் சக்தியின் அரசாங்கத்தில் குறித்த கட்டிடங்கள் மீதான சட்ட நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன், கரையோர பாதுகாப்பு திணைக்களத்தினால் கடுமையான உத்தியோகபூர்வ நடவடிக்கைகளும் மேற்கொள்ள ஆரம்பிக்கப்பட்டுள்ளது.