Trinco Mirror
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • திருக்கோணமலை
    • உலகம்
    • ஆய்வுக் கட்டுரை
    • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • ஆவணங்கள்
  • அமைப்புகள்
Listen Live
Font ResizerAa
Trinco Mirror
Listen
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • திருக்கோணமலை
    • உலகம்
    • ஆய்வுக் கட்டுரை
    • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • ஆவணங்கள்
  • அமைப்புகள்
Follow US

இராணுவ தாக்குதலில் உயிரிழந்த இளைஞனுக்கு தமிழ் அரசியல் தலைவர்கள் பலரும் இறுதி அஞ்சலி

ஆவணி 12, 2025
இலங்கை
படிக்க 3 நிமிடங்கள்
SHARE

முத்தையன்கட்டு, முல்லைத்தீவு

கடந்த வாரம் இலங்கை இராணுவத்தின் தாக்குதலுக்கு உட்பட்டு உயிரிழந்த 32 வயதான எதிர்மனசிங்கம் கபில்ராஜ் என்ற இளைஞனின் இறுதிச் சடங்கில், அவரின் குடும்பத்தினர், தமிழ் அரசியல் தலைவர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டிருந்தனர்.

ஏழு மாத குழந்தையின் தந்தையாகிய கபில்ராஜின் இறுதி சடங்குகள், போலீஸ் பாதுகாப்புடனும் சட்டமன்ற உறுப்பினர்கள் சிவஞானம் சிறிதரன், துரைராசா ரவிகரன், காதர் மஸ்தான் மற்றும் முன்னாள் பாரளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன், உள்ளூராட்சி சபை உறுப்பினர்கள் மற்றும் நூற்றுக்கணக்கான பொதுமக்கள், அவரது குடும்பத்தினரின் பங்குபற்றலுடன் இடம்பெற்றது.

முல்லைத்தீவு முத்தையன்கட்டு குளத்தில் இருந்து உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பில் வட மாகாணத்துக்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபரின் பொறுப்பின் கீழ் பொலிஸ் குழுவொன்று விசாரணைகளை முன்னெடுத்துள்ளது.

போலீஸ் அறிக்கை

அத்துடன் இராணுவ முகாமுக்குள் அத்துமீறி நுழைந்து அங்கிருந்த பொருட்களை திருடுவதற்கு முற்பட்டவர்களை விரட்டுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்ட போதே குறித்த இளைஞர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

எவ்வாறாயினும் இந்த விடயம் தொடர்பில் எந்தவித தலையீடும் இன்றி விசாரணை நடவடிக்கைகள் வெளிப்படையாக முன்னெடுக்கப்படும் என பொலிஸ் ஊடகப் பிரிவு மேலும் சுட்டிக்காட்டியுள்ளது.

முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் முத்தையன் கட்டு இடதுகரை ஜீவா நகர் பகுதியைச் சேர்ந்த 32 வயதான எதிர்மன்னசிங்கம் கபில்ராஜ் எனும் இளைஞர் காணாமல் போயிருந்தார். தொடர்ச்சியாக அப்பிரதேச மக்களால் தேடப்பட்டு வந்த நிலையில் அவர் கடந்த 9ஆம் திகதி முத்தையன்கட்டு குளத்திலிருந்து சடலமாக மீட்கப்பட்டிருந்தார்.

குறித்த இளைஞர் உள்ளிட்ட 5 பேர் முத்தையன்கட்டு குளத்துக்கு அண்மித்து அமைந்துள்ள 63 ஆவது படைப்பிரிவு இராணுவ முகாமுக்கு சென்றிருந்த தருணத்தில் இராணுவத்தினரால் அவர்கள் கடுமையாக தாக்கப்பட்டதாக பொதுமக்கள் தெரிவித்திருந்தனர்.

இந்த பின்னணியில் இந்த சம்பவத்துக்கு நீதி வேண்டும் எனவும் இராணுவத்தினரே குறித்த இளைஞரின் மரணத்துக்கு பொறுப்புக்கூற வேண்டும் எனவும் குறிப்பிட்டிருந்தனர்.

இந்நிலையில் பொலிஸ் ஊடகப்பிரிவு இந்த விடயம் தொடர்பில் நேற்று முன்தினம் விசேட அறிக்கையொன்றை வெளியிட்டு சம்பவத்தை தெளிவுபடுத்தியுள்ளது. அதன் விவரம் பின்வருமாறு;

முல்லைத்தீவு பொலிஸ் அத்தியட்சகர் ஒட்டுச் சுட்டான் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சிவநகர் பிரதேசத்தில் அமைந்துள்ள 12 ஆவது சிங்கப்படையணி முகாமை அப்புறப்படுத்துவதற்கு அண்மைய நாட்களாக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் கடந்த 7 ஆம் திகதி இரவு குறித்த முகாமையில் அகற்றப்பட்ட இரும்பு மற்றும் இதர பொருட்களை எடுத்துச் செல்வதற்காக முகாமின் வளாகத்துக்குள் அத்துமீறி நுழைந்து ஐந்து பேரை வெளியேற்றுவதற்காக முகாமில் இருந்த இராணுவத்தினர் நடவடிக்கை எடுத்துள்ளனர். இதன்போது தப்பிச்செல்ல முயன்ற ஒருவர் முத்தையன்கட்டு குளத்தில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.

இந்நிலையில் வடக்கு மாகாணத்துக்கு பொறுப்பான சிரேட பிரதிப் பொலிஸ் மா அதிபரின் பொறுப்பின் கீழ’ விசேட பொலிஸ் குழுவொன்று நியமிக்கப்பட்டு விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இதற்கமைய மேற்கொள்ளப்பட்ட மேலதிக விசாரணைகளின் அடிப்படையில் குறித்த 5 பேரும் முகாம் வளாகத்தினுள் அத்துமீறி நுழைந்துள்ளனர். அவர்களை விரட்டியடிக்க முற்பட்ட போது அவர்கள் மீது தாக்குதல் மேற்கொண்டதாக தெரிவித்து குறித்த முகாமில் இருந்த இராணுவ சிப்பாய் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

அத்துடன் குறித்த பொருட்களை திருடுவதற்கு சந்தேக நபர்களுக்கு உதவி ஒத்தாசை வழங்கிய குற்றச்சாட்டில் மேலும் இரு இராணுவ சிப்பாய்கள் ஒட்டுசுட்டான் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதற்கமைய சந்தேகநபர்கள் மூவரும் கடந்த சனிக்கிழமை முல்லைத்தீவு நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில் அவர்களை எதிர்வரும் 19 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவு பிறப்பித்தார்.உயிரிழந்தவரின் சடலம் மீதான பிரேத பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்த விடயம் தொடர்பில் எந்தவித தலையீடும் இருக்காது. விசாரணை நடவடிக்கைகள் வெளிப்படையாகவும் தராதரம் பாராமல் முன்னெடுக்கப்படும் எனவும் பொலிஸ் ஊடகப் பிரிவு விடுத்துள்ள அந்த அறிக்கையில் மேலும் சுட்டிக்காட்டியுள்ளது.

Your Ad Here
Place your ads on our website

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்
AdvertisementSidebar Ad 2

தொடர்புடைய செய்திகள்

இலங்கைதிருக்கோணமலை

மன்னார் “கருநிலம்” போராட்டத்திற்கு ஆதரவாக திருகோணமலையில் கவனயீர்ப்பு

ஆவணி 6, 2025
இலங்கைதிருக்கோணமலை

மூதூர்-மணற்சேனையில் சர்வதேச நீதிகோரி கையெழுத்துப் போராட்டம்

புரட்டாதி 7, 2025
இலங்கைதிருக்கோணமலை

திருகோணமலையில் நீண்டகாலமாக திருட்டில் ஈடுபட்டு வந்த நபரொருவர் கைது

ஆவணி 15, 2025
இலங்கை

தொடரும் இனவழிப்பு ! முல்லைத்தீவில் இராணுவத்தினரால் துரத்தி துரத்தி தாக்குதல்

ஆவணி 9, 2025
Trinco MirrorTrinco Mirror
Follow US
© 2025 Trinco Mirror Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • நிகழ்வுகள்
  • ஆவணங்கள்
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?