திருகோணமலை பள்ளத்தோட்டம் பாலமுருகன் பூங்காவனத்திருவிழா கடந்த 09ம் திகதி இடம்பெற்றதையடுத்து இசை நிகழ்ச்சியும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இந்நிலையில் இனந்தெரியாத கும்பலொன்று உள் நுழைந்து தாக்குதல் நடாத்தியதுடன் ஆலய உபகரணங்களை சேதமாக்கியுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

இது தொடர்பில் திருகோணமலை தலைமையக பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
