சிறிலங்காவில் அடிக்கடி தமது கருத்துக்களால் தமது இனவாத இருப்பை வெளிப்படுத்த முனைகின்ற ஒரு சிலரில் முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச மிக முக்கியமானவர்.
இலங்கையில் தமிழ் மக்களுக்கு எதிராக எப்போதும் இனவாதத்தை கக்கிவரும் இவர், ஒரு தமிழர் எப்போதும் அங்கீகரிக்கப்பட்டுவிடக்கூடாது என்பதையே குறிவைத்து பேசிவருகிறார்.
இந்த நிலையில், பிரதி அமைச்சர் அருண் கேமச்சந்திராவுக்கு புலிகளின் தொடர்பாளர் எனவும் அவர் வல்வெட்டிதுறைக்கு பிரச்சாரக்கூட்டத்திற்கு சென்று புலிகளின் தலைவருக்கு சிலை வைப்பதாக கூறியதாகவும் ஒரு வன்மத்தை வெளிப்படுத்தி மேலும் பல குற்றச்சாட்டுகளையும் முன்வைத்துள்ளார்.