கல்வி அமைச்சின் தேசிய கல்வி நிறுவகம் ஊடாக இன்றைய தினம்(06) திருக்கோணமலை மாவட்ட பாடசாலை அதிபர்களுக்கு கல்வி மறுசீரமைப்பு தொடர்பான தெளிவூட்டலை வழங்கும் நோக்குடன் உவர்மலை விவேகானந்தா கல்லூரி அரங்கில் விசேட கலந்துரையாடல் இடம் பெற்றது.
கலந்துரையாடல் ஊடாக புதிய கல்வி மறுசீரமைப்பு தொடர்பில் தெளிவான புரிதல்களையும், அதன் படிக்கட்டங்களையும் அதிபர்களுக்கு தெளிவுபடுத்தும் நோக்குடன் இந்த கலந்துரையாடல் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது.
இதன் போது தேசிய கல்வி நிறுவகத்தின் வளவாளர்கள் கலந்து கொண்டு தெளிவுபடுத்தல்களை வழங்கியிருந்தனர்.