கடந்த இரண்டு ஆண்டுகளில், செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் வளர்ச்சி பன்மடங்கு அதிகரித்துள்ளது. இதனால், மனிதர்களின் வேலைவாய்ப்புகள் குறைவதற்கான அபாயம் அதிகரித்துள்ளதாக வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர்.
அமெரிக்காவைச் சேர்ந்த Aescape என்ற நிறுவனம், உலகின் முதல் AI இயங்கும் மசாஜ் சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது. இது உலகளவில் வாடிக்கையாளர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
Aescape நிறுவனத்தின் நிறுவனர் எரிக் லிட்மேன், அறுவை சிகிச்சை ரோபோக்களை ஒத்த ரோபோக்களைப் பயன்படுத்தி AI மசாஜ் சேவையை வழங்குகிறார்.