Trinco Mirror
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • திருக்கோணமலை
    • உலகம்
    • ஆய்வுக் கட்டுரை
    • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • ஆவணங்கள்
  • அமைப்புகள்
Listen Live
Font ResizerAa
Trinco Mirror
Listen
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • திருக்கோணமலை
    • உலகம்
    • ஆய்வுக் கட்டுரை
    • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • ஆவணங்கள்
  • அமைப்புகள்
Follow US

மரண தண்டனை வழங்கிய திருகோணமலை மேல் நீதிமன்றம்

ஆவணி 6, 2025
இலங்கை திருக்கோணமலை
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

மனைவியை கொலை செய்த கணவனுக்கு மரண தண்டனை வழங்கி திருகோணமலை மேல் நீதிமன்றம் நேற்று செவ்வாய்க்கிழமை (05) தீர்ப்பளித்துள்ளது.

குறித்த வழக்கானது திருகோணமலை மேல் நீதிமன்ற நீதிபதி எம்.என்.எம். அப்துல்லாஹ் முன்னிலையில் தீர்ப்பிற்காக நேற்றைய தினம் (05) எடுத்துக் கொள்ளப்பட்டபோது திறந்த நீதிமன்றில் வாசித்துக் காட்டி குறித்த தீர்ப்பை வழங்கியிருந்தார்.

கடந்த 2019 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 22 ஆம் திகதி கந்தளாய் பகுதியில் மனைவி முஹம்மது பௌஸ் ரஷ்மியா (வயது 29) என்பவரை கூரிய ஆயுதத்தினால் தாக்கி திட்டமிட்டு கொலை செய்த குற்றச்சாட்டின் பேரில் திருகோணமலை நீதிமன்றில் குறித்த வழக்கு இடம்பெற்று வந்தது.

இந்நிலையில் கணவரான கந்தளாய் – பேராறு பகுதியில் வசித்து வரும் மங்கு என்று அழைக்கப்படும் சுபியான் இன்சான் (வயது 38) என்பவர் குறித்த கொலையை செய்தார் என எதிரிகள் சார்பில் வழங்கப்பட்ட வாக்குமூலங்களின் அடிப்படையில் உறுதி செய்யப்பட்டது.

வழக்கினை அரச சட்டத்தரணி ரி.தர்ஷிகா நெறிப்படுத்தியதுடன் தண்டனை சட்டக்கோவை இலக்கம் 296 இன் கீழ் கொலை குற்றச்சாட்டை புரிந்தார் என்ற குற்றச்சாட்டின் பேரில் குறித்த நபருக்கு இன்றைய தினம் மரண தண்டனை வழங்கி தீர்ப்பளிக்கப்பட்டது.

திருகோணமலை மேல் நீதிமன்ற நீதிபதி என்.எம்.எம்.அப்துல்லாஹ் நீதிபதியாக திருகோணமலை மேல் நீதிமன்றத்தில் கடைமையாற்றும் சந்தர்ப்பத்தில் வழங்கிய முதல் மரண தண்டனைக்கான தீர்ப்பு இது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Your Ad Here
Place your ads on our website

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
சனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்
AdvertisementSidebar Ad 2

தொடர்புடைய செய்திகள்

இலங்கைதிருக்கோணமலை

கிண்ணியாவில் பேருந்து – எரிபொருள் பவுசர் நேருக்கு நேர் மோதி விபத்து

புரட்டாதி 7, 2025
இலங்கை

முஸ்லிம் பெண் ஊழியர்களின் கலாசார உடையை அகற்றச் சொல்வது ஏற்க முடியாதது – இம்ரான் எம்.பி!!

ஆடி 31, 2025
இலங்கைதிருக்கோணமலை

சம்பூரில் மனித எச்சங்கள் தொடர்பாக இன்று நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு

ஆடி 30, 2025
இலங்கைதிருக்கோணமலை

திருகோணமலை அரச வங்கி ஊழியர்களால் இன்று கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம்

ஆவணி 12, 2025
Trinco MirrorTrinco Mirror
Follow US
© 2025 Trinco Mirror Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • நிகழ்வுகள்
  • ஆவணங்கள்
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?