திருக்கோணமலை மூன்றாம் கட்டை பகுதியில் இன்று (03) அதிகாலை 3 மணியளவில் கொலை சம்பவம் ஒன்று பிரதான வீதியில் இடம் பெற்றுள்ளது.
நேற்று இரவு சுற்றுலா விடுதி ஒன்றில் நடந்த களியாட்ட நிகழ்வின் பின்னர் அங்கே ஏற்பட்ட சிறு முரண்பாடு இரண்டு குழுக்களுக்கு இடையே பாரிய முரண்பாடாக ஏற்பட்ட சந்தர்ப்பத்தில் ஒரு நபரை அடித்து கொலை செய்துள்ளனர்.
குறித்த சம்பவம் நடந்த இடத்தில் இருந்து ஐம்பது மீட்டர் தொலைவில் போலீஸ் மற்றும் ராணுவ சோதனை சாவடி இருந்த போதிலும் உரிய நடவடிக்கைகள் எதுவும் மேற்கொள்ளப்படாமையால், குறித்த இறப்பு ஏற்பட்டுள்ளது.
இந்த சம்பவத்தில் திருக்கோணமலை கிருஷ்ணன் கோயில் பகுதியைச் சேர்ந்த தேணுவர ஹன்னதிகே வினோத் (33) (53, Station Road, Trincomalee) எனும் நபரே இறந்துள்ளார்.