திருகோணமலை Blossoming Future முன்பள்ளி சிறார்களின் கண்காட்சியானது இன்றைய தினம்(29.07.2025) முன்பள்ளி வளாகத்தில் இடம்பெற்றது.
இந்தக் கண்காட்சியானது “மாசற்ற சூழலை உருவாக்குவோம்” என்ற தொனிப்பொருளில் பிளாஸ்ரிக் பாவனையை குறைத்தல், கழிவு முகாமைத்துவத்தை பேணுதல், மீள்சுழற்சி, மீள்பாவனை போன்ற சூழல் நேய எண்ணக்கருக்களை சிறார்கள், பெற்றோர்கள் மத்தியிலும் சமூகத்திற்கும் கொண்டுபோய் சேர்க்கும் நோக்கோடு முன்னெடுக்கப்பட்டது.
இதன்போது சிறார்களால் கழிவுப்பொருட்களைக் கொண்டு தயாரிக்கப்பட்ட ஆக்கங்கள் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன. இந்நிகழ்வுக்கு பட்டிணமும் சூழலும் பிரதேச செயலக நிர்வாக கிராம உத்தியோகத்தர் திரு.றொபட், மாநகரசபையின் செயலாளர் திரு.ஜெயவிஷ்ணு ஆகியோரும் இன்னும் பலரும் கலந்து சிறப்பித்திருந்தனர்.
இதன்போது திருகோணமலையில் ஊடகச் செயற்பாடுகளை சிறப்பான முறையில் முன்னெடுத்து வரும் இளம் ஊடகவியலாளர்களான சஞ்சீவன் துரைநாயகம்(வீரகேசரி) , தனுஷன்(அகரம் மீடியா) ஆகியோரும் கௌரவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.