Trinco Mirror
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • திருக்கோணமலை
    • உலகம்
    • ஆய்வுக் கட்டுரை
    • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • ஆவணங்கள்
  • அமைப்புகள்
Listen Live
Font ResizerAa
Trinco Mirror
Listen
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • திருக்கோணமலை
    • உலகம்
    • ஆய்வுக் கட்டுரை
    • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • ஆவணங்கள்
  • அமைப்புகள்
Follow US

கலங்க வைக்கும் செம்மணி : குழந்தையின் என்பு அருகே பால் போத்தல்

கலங்க வைக்கும் செம்மணி

ஆடி 26, 2025
இலங்கை முதன்மை செய்தி
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

யாழ் (Jaffna) செம்மணியில் குழந்தையின் என்புத் தொகுதி ஒன்றும் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளது.

செம்மணியில் மனிதப் புதைகுழியிள் இருந்து குழந்தைகளுக்குப் பாலூட்டும் போத்தல் அடையாளம் காணப்பட்ட பகுதியில் குறித்த என்புத்தொகுதி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.மேற்படி என்புத்தொகுதி நேற்றைய தினம் (25) அகழ்வின் போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

செம்மணி – சித்துப்பாத்தி இந்து மயானத்தில் அடையாளம் காணப்பட்ட மனிதப் புதைகுழிக்கு அருகில் மேலும் புதைகுழிகள் இருக்கலாம் எனச் செய்மதிப் படங்கள் மூலம் சில பகுதிகள் சந்தேகத்தின் அடிப்படையில் அடையாளப்படுத்தப்பட்டு தொல்லியல் பேராசிரியர் ராஜ் சோமதேவாவினால் நீதிமன்றத்தில் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டிருந்து.

அந்தப் பகுதி தடயவியல் அகழ்வாய்வுத் தளம் இரண்டு என நீதிமன்றத்தால் பிரகடனப்படுத்தப்பட்டு அகழ்வுப் பணிகள் இடம்பெற்று வருகின்றன.

இரண்டாம் கட்ட அகழ்வுப் பணிகளின் 17 ஆம் நாள் அகழ்வுப் பணிகள் இடம்பெற்றபோது குழந்தைகளுக்குப் பாலூட்டும் போத்தல் ஒன்றும் மற்றும் வெள்ளை நிற ஆடை ஒன்றும் அடையாளம் காணப்பட்டிருந்தன.

இந்தநிலையில், அந்தப் பகுதியில் இருந்து குழந்தையின் என்புத் தொகுதி ஒன்று அடையாளம் காணப்பட்டு அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Your Ad Here
Place your ads on our website

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்
AdvertisementSidebar Ad

தொடர்புடைய செய்திகள்

இலங்கைதிருக்கோணமலை

கௌரவ மாநகர முதல்வர் க.செல்வராஜா தலைமையில் உள்ளூராட்சி வார நிகழ்வுகள்

புரட்டாதி 23, 2025
இலங்கைதிருக்கோணமலை

ஈழத் தமிழர் உரிமைகள் பெருமன்று (ETRA) திருகோணமலை பிரகடனம்!

மாசி 18, 2026
இலங்கைஉலகம்

இலங்கை குடிமக்களுக்கு 90 நாள் இலவச வருகை விசா

ஆடி 31, 2025
இலங்கை

யாழ். மாவட்ட அரசாங்க அதிபருக்கு எதிராக நாடாளுமன்றில் முறைப்பாடு

ஆடி 26, 2025
Trinco MirrorTrinco Mirror
Follow US
© 2025 Trinco Mirror Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • நிகழ்வுகள்
  • ஆவணங்கள்
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?