இலங்கை கிராம நிலதாரி சேவையின் தரம் III பதவிக்கான ஆட்சேர்ப்பு (2025/2026) போட்டிப் பரீட்சை மற்றும் நேர்முகத் தேர்வின் அடிப்படையில் தெரிவு செய்யப்பட்ட விண்ணப்பதாரர்களின் பட்டியலை பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு வெளியிட்டுள்ளது.
2026 மார்ச் 29 அன்று நடைபெற்ற போட்டிப் பரீட்சையையும், செப்டம்பர் 4, 5, 6 ஆகிய தினங்களில் நடைபெற்ற நேர்முகத் தேர்வையும் அடிப்படையாகக் கொண்டு இந்தத் தெரிவு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அமைச்சு தெரிவித்துள்ளது.
தெரிவு செய்யப்பட்ட விண்ணப்பதாரர்கள் முதற்கட்டமாக மூன்று மாத பயிற்சியில் பங்கேற்கவுள்ளனர். பயிற்சியை வெற்றிகரமாக நிறைவு செய்பவர்களுக்கு இலங்கை கிராம நிலதாரி சேவையின் தரம் III பதவிக்கான நிரந்தர நியமனம் வழங்கப்படும்.
இந்த நிலையில், திருகோணமலை மாவட்டத்தைச் சேர்ந்த தெரிவு செய்யப்பட்ட விண்ணப்பதாரர்களின் பெயர் பட்டியல் பின்வருமாறு வெளியாகியுள்ளது.
திருகோணமலை மாவட்டத்தில் தெரிவான விண்ணப்பதாரர்களின் பெயர் பட்டியல்

